GOSSIPS
“வசமா சிக்கிட்டேன், இனி என்ன பண்ண முடியும்”?? புலம்பும் சின்ன நடிகை
“வசமாய் சிக்கிவிட்டேன்” என அந்த இயக்குனரை நினைத்து புலம்பி வருகிறாராம் அந்த சின்ன நடிகை. ஏன் தெரியுமா?
பக்கத்து மாநிலத்தில் படு பயங்கரமாக வளர்ந்து கொண்டிருக்கும் அந்த 20 வயது கூட தாண்டாத சின்ன நடிகை தற்போது பல படங்களை கையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த படம் வெளியாகி அவ்வளவாக எடுபடவில்லை என்றாலும் அவரது மார்க்கெட் எகிறியது.
இளைஞர்களை தனது கட்டழகால் மயக்கி தன் பக்கம் இழுத்து வரும் அந்த நடிகை தற்போது கோலிவுட்டில் அந்த அகோரி இயக்குனருடன் சிக்கிவிட்டார். ஆம்! தனது படத்தில் நடிக்கும் நடிகர்களை அடித்தே நடிக்க வைக்கும் அந்த இயக்குனர் தற்போது இந்த சின்ன நடிகையையும் பாடாய் படுத்தி எடுத்து வருகிறாராம்.
அவர் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பை கச்சிதமாக வெளிக்கொண்டு வரும் திறமை படைத்த அந்த இயக்குனர், சொன்ன தேதியில் படத்தை முடிப்பதில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறாராம். அந்த சின்ன நடிகையின் டேட்ஸ் வாங்கிய அந்த இயக்குனர், டேட்ஸ் முடிந்தும் அவரது காட்சிகளை படமாக்கி முடிக்கவில்லையாம்.
இதனால் புலம்பி வருகிறாராம் அந்த சின்ன நடிகை. ஏற்கனவே பக்கத்து மாநிலத்தில் பல படங்களில் டேட்ஸ் கொடுத்த நிலையில் கோலிவுட்டில் இந்த திரைப்படம் மட்டும் வெகு நாட்களாக இழுத்துக் கொண்டே போவதால் ஏற்கனவே மற்ற திரைப்படங்களுக்கு கொடுத்த டேட்ஸ்கள் எல்லாம் சிக்கலில் உள்ளதாம்.
“இவர் என்ன இப்படி செய்கிறார்?, தெரியாம இவர் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே” என அந்த சின்ன நடிகை தற்போது புலம்பி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.