GOSSIPS
விருது இயக்குனரால் பன்முக நடிகருக்கு வந்த சோதனை.. “ஆள விடுடா சாமி”..
விருது இயக்குனரால் பன்முக நடிகருக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளதாம். என்ன தெரியுமா?
விருதுகளை நோக்கியே படம் எடுக்கும் அந்த இயக்குனர், கமெர்சியல் திரைப்படம் எடுத்தாலும் கூட புதுமையான முயற்சியை கையாள்வார். அவர் திரைப்படம் இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும். அந்த அளவுக்கு தரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிபவர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கிறார்.
அப்படிப்பட்ட இயக்குனர் தமிழ் சினிமாவின் பன்முக நடிகரை வைத்து ஒரு திரைப்படத்தை பல காலமாக இயக்கி வருகிறார். இயக்குனர் வேறு படு பெர்ஃபெக்ட்டாக எடுப்பவர். ஆதலால் ஒரு காட்சியையே திரும்ப திரும்ப எடுக்கிறார் என்பதனால் தான் இவ்வளவு நாள் தாமதம் ஆகி வருகிறது என கூறுகிறார்களாம்.
இதனால் அந்த இயக்குனரிடம் சிக்கி வேதனையில் உள்ளாராம் பன்முக நடிகர். பன்முக நடிகர் தற்போது பல படங்களை கைக்குள் வைத்திருக்கிறார். ஆதலால் இந்த இயக்குனருக்கு கால் ஷீட் கொடுப்பதில் தற்போது பன்முக நடிகருக்கு பிரச்சனை எழுந்துள்ளதாம். “எடுத்த காட்சி சரியாக வரவில்லை, மீண்டும் எடுக்க வேண்டும். ஆதலால் கால் ஷீட் கொடுங்கள்” என பன்முக நடிகரை வற்புறுத்தி வருகிறாராம் இயக்குனர். இதனால் பன்முக நடிகர் செம காண்டில் இருக்கிறாராம்.
ஆனால் தமிழின் முன்னணி இயக்குனர் என்பதால் பன்முக நடிகர் அவரை பொறுமையாக கையாள்கிறாராம். “இவர் என்ன ஒரு படத்தை இவ்வளவு நாள் எடுக்கிறார்” என்று சலிப்படைந்துள்ளாராம் பன்முக நடிகர். இதனால் பெரும் சோதனையில் இருக்கிறாராம். ஏற்கனவே படத்தில் பாதி காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து விலகவும் முடியாமல் இருக்கிறாராம். இதனால் ரொம்பவும் அவஸ்தைப்பட்டு வருகிறாராம் பன்முக நடிகர் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
