GOSSIPS
இயக்குனரின் இடும்புத்தனத்தால் அட்டர் ஃப்ளாப் ஆன பூச்சி படம்..
தயாரிப்பாளர் எவ்வளவோ சொல்லியும் இயக்குனர் கேட்காததால் அந்த பூச்சி நடிகரின் படம் ஃப்ளாப் ஆனதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் பூச்சி நடிகர், சமீப காலமாக ஹிட் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் அந்த பெரிய பட்ஜெட் படத்திற்கு ஒப்புக்கொண்டார்.
கதையும் புதுவிதமாக இருந்தபடியால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் நடிகர். ஆனால் படம் என்னவோ உருண்டுகொண்டே இருந்தது. எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியாமல் இருந்தது. இதனால் நடிகர் பெரும் சோகத்தில் மூழ்கினார்.
“இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரீலீஸ் ஆகும்” என படம் தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் தான் அந்த நடிகரின் சொந்தக்காரர் உதவிக்கு வந்தார். அவரின் உதவியால் படம் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது.
ஆனால் படம் வெளியானதற்கு பிறகு தான் பெரும் சோகமே நிகழ்ந்திருக்கிறது. அதாவது படத்தின் ஸ்கிரீன்ப்ளே படுமொக்கை எனவும் படம் மிகவும் பெரிய படமாக இருக்கிறது எனவும் விமர்சனங்கள் படக்குழுவின் காது பட எழுந்து வருகிறது. இதனால் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாராம் தயாரிப்பாளர்.
படம் எடுத்து முடித்த பிறகு இயக்குனருடன் படத்தை தனியாக பார்த்த தயாரிப்பாளர், “ஏன் இவ்வளவு மணி நேரம் படம் எடுத்து வச்சிருக்கீங்க, லென்த்த குறைங்க” என கூறினாராம். ஆனால் இயக்குனரோ “படத்தில் எந்த காட்சியையும் நீக்க முடியாது” என கறாராக கூறினாராம். “இயக்குனரே இவ்வளவு கான்ஃபிடென்டா சொல்றாரே” என தயாரிப்பாளரும் ஓகே சொன்னாராம்.
ஆனால் படம் வெளிவந்த பிறகு தான் அப்படி செய்தது மிகப்பெரிய தவறு என இயக்குனரும் உணர்ந்தாராம். தன்னுடைய இடும்புத்தனத்தால் படம் இப்படி ஆகிவிட்டதே என உணர்ந்ததால் தான் தற்போது சில காட்சிகளை நீக்கி உள்ளாராம் இயக்குனர் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
