GOSSIPS
“அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன், ஆள விடுங்க”… எஸ்கேப் ஆன சின்ன நட்சத்திரம்..
அந்த மாதிரி நடிக்க கூப்பிட்டும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த சின்ன நட்சத்திரத்தை பலரும் பாராட்டி வருகின்றனராம்.
தமிழ் சினிமாவில் சின்ன நட்சத்திரமாக ஜொலித்து வரும் அந்த பிரபல நடிகர் சமீப காலமாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிறு வயதிலேயே நடிக்க வந்த இவர், கதாநாயகனாக நடிக்க தொடங்கியபோது மக்களின் மனதை வென்று தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
நன்றாக போய்க்கொண்டிருந்த கேரியரை இடையில் இவரே கெடுத்துக்கொண்டார். காதல் பிரச்சனைகள், “சாமியாராக போகிறேன்”, என்று தன்னுடைய டிராக்கை மாற்றி திசை மாறிப்போனார். ஆதலால் நடிப்பில் கோட்டை விட்டார். இதனால் பல தயாரிப்பாளர்களுக்கும் இவருக்கும் இடையே பல பிரச்சனைகள் எழுந்தது. சரியாக ஷூட்டிங் செல்லாமல் முழுக்கு போடுவது, டப்பிங்கிற்கு வராமல் இழுத்தடிப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஆதலால் சினிமாத்துறையில் இவருக்கென்று இருந்த இமேஜ் குறைந்தது.
எனினும் மீண்டும் ஒரு கம் பேக் கொடுக்க வேண்டும் என ஹெவியாக உழைத்து உடலை மெருகேற்றி மீண்டும் ஃபார்முக்கு வந்தார் நடிகர். அதன் பின் ஏறுமுகம் தான். பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்ததாம். ஆனால் அதை அவர் இடது கையால் உதறிவிட்டாராம்.
அதாவது ஒரு பிரபல மதுபான நிறுவனத்தில் இருந்து விளம்பரத்தில் நடிக்க கூப்பிட்டார்களாம். அதிக தொகை சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறினார்களாம். ஆனால் “இது போன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை” என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் நடிகர். “காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நடிகர்கள் இருக்கையில், அதிக தொகை கொடுத்தும் மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகருக்கு சல்யூட்” என்று கோலிவுட் வட்டாரங்களில் பாராட்டி வருகின்றார்களாம்.
