GOSSIPS
இயக்குனருக்கே தெரியாமல் கமுக்கமாக வேலையை பார்த்த தயாரிப்பு நிறுவனம்..
இயக்குனருக்கே தெரியாமல் கமுக்கமாக ஒரு பெரிய தொகைக்கு அந்த வாரிசு தயாரிப்பாளரிடம் அந்த வரலாற்று படத்தை விற்றுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.
அந்த பிரம்மாண்ட படத்திற்கு தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது. படக்குழு தீவிர புரோமோஷனில் தற்போது இறங்கியுள்ளது. விரைவில் அத்திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற உள்ளதாகவும் தகவல் வருகிறது.
இந்த நிலையில் அந்த பிரம்மாண்ட வரலாற்று படத்தின் இயக்குனருக்கே தெரியாமல் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் கமுக்கமாக ஒரு வேலையை செய்துள்ளதாம். அதாவது ஒரு பெரிய தொகைக்கு அந்த பிரபல வாரிசு தயாரிப்பாளரிடம் வெளியீட்டு உரிமையை விற்றுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.
இதனை கேட்ட இயக்குனர் கோபமடைந்துள்ளாராம். தன்னை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எப்படி எடுக்கலாம் எனவும், தானும் இப்படத்தின் தயாரிப்பாளர் தான், ஆனாலும் தன்னிடம் இது பற்றி எதுவும் கூறாமல் இப்படி செய்துவிட்டார்களே எனவும் கடுப்பில் இருக்கிறாராம் இயக்குனர்.
ஆனாலும் இதற்கு முன் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களை அந்த வாரிசு தயாரிப்பாளரே வெளியிட்டு வந்தார். ஆதலால் இந்த படத்தையும் அவரிடமே கொடுப்பது தவிற வேறு வழியில்லை என்ற நிலையை தயாரிப்பு நிறுவனம் புரிய வைத்தபிறகு சமாதானம் அடைந்தாராம் இயக்குனர்.
அந்த வாரிசு தயாரிப்பாளர் தற்போது பல படங்களை வெளியிட்டு வருவதாலும், அவரிடம் படத்தை விற்றுவிட்டால் நஷ்டம் வந்தாலும் நாம் ஓரளவு தப்பித்துவிடலாம் என்பதாலும் இயக்குனர் இந்த ஒப்பந்தத்துக்கு ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இயக்குனரும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இதை புரிந்துகொண்டாராம். இந்த நிலையில் அந்த வாரிசு தயாரிப்பாளர் தான் அந்த பிரம்மாண்ட படத்தை வெளியிடப்போவதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
