GOSSIPS
மனைவியை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு வெளிநாட்டு அழகிகளுடன் ஜாலியாக இருந்த மாஸ் நடிகர்..
அந்த பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் தனது மனைவியை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அவரை கண்டுகொள்ளாமல் வெளிநாட்டு அழகிகளுடன் ஜாலியாக இருந்த சம்பவம் நடந்துள்ளதாம்.
பக்கத்து மாநிலத்தின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் அந்த மாஸ் காட்டும் நடிகர். சமீபத்தில் இவர் நடித்த எல்லா படங்களும் மரண ஹிட் அடித்தது. மேலும் இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த அந்த பேன் இந்திய திரைப்படம் இவரை வேர்ல்ட் லெவலுக்கு ரீச் ஆக்கியது.
சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு முக்கிய விழாவிற்கு இவர் அழைக்கப்பட்டார். அந்த விழாவில் நடிகர் தனது மனைவியுடன் கலந்துகொண்டாராம்.
ஆனால் அங்கே தான் வந்திருக்கிறது வினையே. இவர் மாஸ் நடிகர் மட்டுமல்லாது இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட. ஆதலால் வெளிநாட்டு இளம்பெண்கள் இவரை பார்த்ததும் வழிந்து வழிந்து பேசியுள்ளனர். இது அவரின் மனைவிக்கு எரிச்சலை மூட்டிவிட்டதாம்.
ஆனால் அதன் பின் தான் கச்சேரி என்பது போல், அந்த நடிகர் தனது மனைவி பக்கத்தில் தான் இருக்கிறார் என்பதை மறந்து விட்டு அந்த இளம்பெண்களுடன் சிரித்து சிரித்து பேசியிருக்கிறாராம். இது அவரின் மனைவியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியதாம்.
இதனை தொடர்ந்து தாயகம் திரும்பியுள்ளனர் இருவரும். அப்போது வீட்டில் வைத்து நடிகரை அவரின் மனைவி லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டாராம். எரிமலையாய் கொந்தளித்த தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாராம் நடிகர். “மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படி பண்ணிருக்காறே! பலே ஆளுயா அவரு” என சினிமா வட்டாரங்கள் அந்த மாஸ் நடிகரை குறித்து கிசுகிசுத்து வருகிறதாம்.