GOSSIPS
“ஆள விடுங்கடா சாமி”… சீக்கிரம் ஜோலிய முடிச்சிட்டு எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. திணறும் பிரபல இயக்குனர்…
சீக்கிரம் இந்த படத்தை முடித்து விட்டு எஸ்கேப் ஆகிட வேண்டும் என மும்முரமாக வேலை பார்த்து வருகிறாராம் அந்த பிரபல இயக்குனர்.
ஜாலியாக படம் பண்ணும் அந்த இயக்குனருக்கு தனது முந்தைய திரைப்படத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துவிட்டது. ஆதலால் ஏற்கனவே கடுப்பில் இருக்கிறார் டைரக்டர். தனது முந்தைய படம் சரியாக செல்ஃப் எடுக்காததால் பலருடைய கேலிக்கும் உள்ளானது அவரை சோகத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும் தற்போது டாப் நடிகரை வைத்து இயக்கும் இந்த படத்தை எப்படியாவது நல்லபடியாக எடுத்து மீண்டும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என மும்முரமாக வேலை பார்த்து வருகிறாராம். ஆனால் அவரை டென்ஷன் ஏற்றுவதற்காகவே சிலர் சில வேலைகளை செய்கின்றனராம்.
அதாவது முந்தைய படம் அப்படி ஃப்ளாப் ஆனதால் பல அட்வைஸ்களை சுற்றி உள்ளவர்கள் கூறி வருகிறார்களாம். ஏற்கனவே கடுப்பில் இருந்த இயக்குனர் இவர்களின் அட்வைஸால் மேலும் கடுப்பாகியுள்ளாராம்.
தற்போது டாப் நடிகரை வைத்து இயக்கும் இந்த படத்தை எப்படியாவது சீக்கிரம் நல்லபடியாக முடித்தால் தான் பெரிய நிம்மதியே நமக்கு கிடைக்கும் என நினைத்து மும்முரமாக வேலை செய்து வருகிறாராம் இயக்குனர்.
எப்போதும் ஜாலியாக படம் பண்ணும் இயக்குனர் தற்போது சீரீயஸாக இருக்கிறாராம். எப்படியாவது இந்த படத்தை நல்லபடியாக முடித்தால் போதும் என்ற எண்ணம் மட்டும் தான் அவர் மனதில் தற்போது இருக்கிறதாம்.
தனது முந்தைய படத்தை ஜாலியாக எடுத்து கோட்டை விட்டதால் இந்த படத்தையும் அப்படி கோட்டை விடாமல் மிகவும் கவனமாக இயக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் தான் இவ்வளவு சீரீயஸாக இருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.