GOSSIPS
புது நடிகையை பார்த்து பொறாமைப்பட்ட பேன் இந்திய நடிகை.. எதுக்குப்பா இதெல்லாம்?
தமிழ் சினிமாவில் புதிதாக நடிக்க வந்த அந்த நடிகையை பார்த்து பொறாமையில் பொங்கி உள்ளராம் அந்த பேன் இந்திய நடிகை.
சமீபத்தில் வெளியான அந்த புதிய படத்தில் நடிகையாக அறிமுகமானார் அந்த சினிமா பிரபலத்தின் மகள். நடிப்பு, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என பன்முக திறமை கொண்ட அந்த நடிகை தான் தற்போது கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுன்.
முதல் படத்திலேயே ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் கூடிவிட்டனர். அந்த அளவுக்கு அந்த நடிகை மக்களின் மனதை கவர்ந்திழுத்துவிட்டார். அம்மணி நன்றாகவும் நடிக்கிறார் என பெயரும் வாங்கிவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவரின் இந்த திடீர் வளர்ச்சி பல நடிகைகளுக்கு வயிற்றில் புகையை கிளப்பி உள்ளதாம். சினிமா பிரபலத்தின் வாரிசாக இருந்தால் போதும் போல, வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடுகிறது என பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அவரை போலவே இன்னொரு சினிமா பிரபலத்தின் வாரிசான பேன் இந்திய நடிகைக்கும் புகைச்சல் வந்துள்ளதாம்.
பேன் இந்தியா நடிகையும் அந்த புதுமுக நடிகை போலவே பன்முகம் கொண்ட நடிகை தான். ஒரு காலத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என கொடி கட்டிப் பறந்த அந்த பேன் இந்திய நடிகைக்கு தற்போது வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எப்போவாவது தான் சினிமாவில் அவர் தலைக்காட்டுவதால் சிலருக்கு அவரை மறந்துகூட போய்விட்டது. இந்த நிலையில் தான் தனக்கு வராத வாய்ப்புகள் எல்லாம் அந்த புதுமுக நடிகைக்கு வருவதாக புகைச்சல் கொள்கிறாராம். இவ்வாறு அந்த பேன் இந்திய நடிகையை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
