Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“முன்னாள் கணவரை மறக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி??” திண்டாடும் பிரபல நடிகை..

GOSSIPS

“முன்னாள் கணவரை மறக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி??” திண்டாடும் பிரபல நடிகை..

பிரபல நடிகை தனது முன்னாள் கணவரை மறக்க முடியாமல் தான் அப்படி ஒரு விஷயம் செய்ததாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் அந்த பிரபல நடிகை சமீபத்தில் தான் தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பின் பல திரைப்படங்களில் கிளாமர் கியூனாக கலக்கி வரும் அவர் தனது முன்னாள் கணவரை மறக்க முடியாமல் திண்டாடி வருகிறாராம்.

பிரபல நடிகை அந்த நடிகரை காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார். ரசிகர்கள் பலரின் கண்படும்படி இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். ஆனால் திடீரென இருவரும் பிரிந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “சூப்பர் ஜோடியாக திரிந்தவர்கள் ஏன் இப்படி பிரிந்தார்கள்?” என பலரும் சோகத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்தார் நடிகை. ஆனாலும் உள்ளுக்குள் எங்கோ அந்த நடிகரின் மீதான காதல் தேங்கி கிடக்கிறதாம். ஆதலால் அவரை மறக்க முடியாமல் ஏக்கத்தில் இருந்ததால் தான் அப்படி ஒரு காரியம் செய்தாராம்.

அதாவது  விடா முயற்சியாக தனது முன்னாள் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அவர் அந்த அளவு முயற்சி செய்து வாங்கியதற்கு காரணமே அங்கே தனது முன்னாள் கணவருடனான நினைவுகளில் வாழ்ந்துவிடலாம் என்பதற்காகத்தானாம்.

“என்னதான் பிரிந்தாலும், காதலின் நினைவு ஆழமானதல்லவா, அதனால் தான் தனது முன்னாள் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டை கடின முயற்சி செய்து சொந்தமாக்கிக்கொண்டார்” என அந்த பிரபல நடிகையை பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading

More in GOSSIPS

To Top