GOSSIPS
“யூட்யூப்” நடிகையை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. வெளுத்து வாங்கிய நடிகை
தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனரை வெளுத்து வாங்கியுள்ளார் அந்த “யூட்யூப்” நடிகை.
“யூட்யூப்” மூலம் மிகவும் பிரபலமான அந்த இளம் நடிகை சமீபத்தில் அந்த சாதனை திரைப்படத்தில் ஒரு Bold ஆன ரோலில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் மேல் பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது அடுத்த வாய்ப்பிற்கான தேடலில் இருக்கிறார்.
பொதுவாக சினிமாக்களில் “அட்ஜஸ்மெண்ட்” என்ற வார்த்தை மிகவும் பழகிப்போன வார்த்தை. பல காலமாக சினிமா துறையில் சில நடிகைகள் அட்ஜஸ்மென்ட் செய்து தங்கள் கேரியரை தக்கவைத்து கொண்ட சம்பவங்கள் உண்டு. சமீபத்தில் “Me too” டிரெண்டிங்கில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு சினிமாத்துறையில் சகஜமாகி போன “அட்ஜஸ்ட்மென்ட்” என்ற வார்த்தையை அந்த “யூட்யூப்” நடிகையும் எதிர்கொண்டுள்ளாராம்.
அதாவது சில நாட்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறீர்களா என கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை சரி என கூறியிருக்கிறார். அதன் பின் “ஆனால் நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன். என்னுடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்படி அட்ஜஸ்ட் செய்தால் சம்பளம் அதிகமாக கிடைக்கும்” என கூறியிருக்கிறார்.
இதை கேட்ட அந்த நடிகை கோபத்தில் அந்த இயக்குனரை கடுமையாக திட்டிவிட்டு தொலைப்பேசியை கட் செய்துள்ளாராம். அந்த சாதனை படத்தில் அப்படிப்பட்ட Bold ஆன காட்சியில் நடித்ததில் இருந்து சிலர் அந்த நடிகையை இந்த மாதிரி தொல்லை செய்து வருகிறார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் ஆங்காங்கே கிசுகிசுக்கப்படுகின்றதாம்.