GOSSIPS
இத்தனை படம் நடிச்சும் ஒன்னு கூட ஓடலையே!! விரக்தியில் சித்து நடிகர்..
பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் ஒரு திரைப்படம் கூட நமக்கு கைக்கொடுக்கவில்லையே என அந்த பிரபல சித்து நடிகர் விரக்தியில் உள்ளாராம்.
அந்த நடிகர் தனது சித்து விளையாட்டை காட்டி நடித்த அந்த முதல் படம் வேற லெவல் ஹிட் ஆனது. மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலத்தின் மகன் என்பதால் முதல் படத்தின் வெற்றிக்கு பின் அவரது கேரியர் டாப் கியரில் ஏறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புஸ்வானம் புஸ் ஆனது போல் அவரது கேரியர் அப்படியே தேங்கிவிட்டது.
முதல் பட வெற்றிக்கு பின் பல படங்களில் அவர் நடித்தார். ஒரு திரைப்படம் கூட ஓடவில்லை. என்ன செய்வது என தெரியாமல் முழித்த அவர் பல காலம் கழித்து ஒரு பிரபல நடிகரின் தம்பியாக நடித்தார். ஆனால் அவரது ராசியோ என்னவோ அந்த படமும் ஓடவில்லை. என்ன ஆனாலும் சரி, பெரிய நடிகனாக வேண்டும் என்ற வெறியில் இருக்கும் அந்த நடிகர் சமீபத்தில் ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினாலும் அதன் பின்னும் அவரை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை.
அவர் தான் அப்படி என்றால் அவரது தம்பியோ ஏகத்துக்கும் பாவம். நடிக்க வந்த புதிதில் ஜொலிஜொலித்த அவரின் தம்பி, காலப்போக்கில் அப்படியே கவுந்துபோனார். எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என தற்போது முட்டி மோதி வருகிறார்.
என்னதான் சினிமாவின் முன்னணி பிரபலமாக இருந்தாலும் தனது மகன்களின் வாழ்க்கையில் சனியன் வீடு கட்டி விளையாடுகிறான் என அவரும் விரக்தியில் இருக்கிறாராம்.
