REVIEW
மதம் பிடித்த “யானை”.. A short review
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் இன்று வெளிவந்திருக்கும் “யானை” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
கௌரவமான பி ஆர் வி குடும்பத்தின் இளைய மகனாக இருக்கும் அருண் விஜய், தனது அண்ணன்கள் மீது மிகவும் பாசமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இவரை வெறுப்பாக பார்க்கிறார்கள். ஏனென்றால் அருண் விஜய் தனது தந்தையின் இரண்டாம் தாய்க்கு பிறந்திருப்பார்.
இந்நிலையில் பி ஆர் வி குடும்பத்தின் மீது இருக்கும் பழைய பகையை தீர்க்க வில்லன் வருகிறார். அவரை அருண் விஜய் எப்படி சமாளித்தார்? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே “யானை” திரைப்படத்தின் கதை.
அருண் விஜய் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அவரின் வீரமான உடல் மொழியும் வசனமும் அனல் பறக்கிறது. சண்டை காட்சிகளில் சூறாவளி போல் பாய்கிறார். அதே போல் சென்டிமென்ட் காட்சிகளில் மனதை உருகவைத்தும் விடுகிறார்.
அருண் விஜய்க்கு அண்ணன்களாக வரும் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் ஆகியோர் தங்களது கதாப்பாத்திரங்களை செம்மையாக செய்திருக்கிறார்கள். கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் கதாநாயகிக்கு உண்டான அழகுடன் கவர்ச்சியாக வந்து பார்வையாளர்களை தட்டிக் கொண்டு போய் விடுகிறார்.
இவர்களுடன் அம்மு அபிராமி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் தங்களது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஜி. வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. அதே போல் விறுவிறு என செல்லும் கோபிநாத்தின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை அசர வைக்கிறது. ஆண்டனி திரைப்படத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப கச்சிதமாக காட்சிகளை கோர்த்திருக்கிறார்.
ஹரி திரைப்படத்தில் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் “யானை” திரைப்படத்தில் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது. படத்தின் பலவீனம் தேவையில்லாத காமெடி காட்சிகள் தான். மத்தபடி மதம் கொண்ட “யானை” ஆக வெறிக்கொண்டு கிளம்ப்பியிருக்கிறது.
மொத்தத்தில் சென்டிமென்ட், காதல், ஆக்சன் என ஒரு பக்கா கம்மெர்சியல் படமாக குடும்பங்களை ரசிக்க வைத்திருக்கிறது “யானை”.
