REVIEW
“திருச்சிற்றம்பலம்” எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்க??
“திருச்சிற்றம்பலம்” திரைப்படம் குறித்து திரைப்படம் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இதில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராசி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட கால இடைவேளைக்கு பிறகு தனுஷும் அனிருத்தும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் பெரும்பாலும் பாசிட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் இத்திரைப்படத்தை குறித்து என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “திரைப்படத்தில் நன்றாக காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தனுஷ்-நித்யா மேனன் காம்போ சூப்பர். பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “தனுஷ் சிம்ப்பிளாக நடித்திருக்கிறார். நித்யா மேனன் ஸ்கிரீனை தெறிக்கவிடுகிறார்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “விஐபி திரைப்படத்திற்கு பிறகு தனுஷின் ஒரு Feel Good திரைப்படம்” என கூறியுள்ளார்.
ஒருவர் “ஒரு Romantic comedy திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார். சிரித்து சிரித்து என் கன்னங்கள் வலிக்கிறது” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “இதயத்தை தொடும் ஒரு feel good திரைப்படம். தனுஷ் நடிப்பில் ஒரு எமோஷனல் டிராமா. காதல், நட்பு, நிராகரிப்பு, குடும்பம், தோல்வி என எல்லாமே ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “முதல் பாதி அழகாக இருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவை இப்படி ஒரு feel good திரைப்படத்தில் பார்த்து பல நாட்கள் ஆகிறது. நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர்” என கூறியுள்ளார்.
