Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

அருள்நிதியின் “டைரி” எப்படி இருக்கிறது?? ரசிகர் பார்வை..

REVIEW

அருள்நிதியின் “டைரி” எப்படி இருக்கிறது?? ரசிகர் பார்வை..

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “டைரி”. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.

“டிமாண்டி காலணி”, “டி பிளாக்”, “தேஜாவு” என பெரும்பாலும் த்ரில்லர் வகையராக்களையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள மற்றும் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான் “டைரி”. இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்களே பெரும்பாலும் வந்த வண்ணம் உள்ளது.

ஒரு சிறந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இத்திரைப்படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறுகிறார்கள். அருள்நிதி இதற்கு முன் நடித்த “தேஜாவு” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. ஆனால் “டைரி” திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது.

பெரும்பாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.

ஒருவர் “ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன்.  இரண்டாம் பாதியில் பல டிவிஸ்ட்டுகள் நிரம்பியிருக்கின்றன. சில டிவிஸ்ட்டுகள் வியூகிக்கும்படியாக இருக்கிறது. ஆனால் சில டிவிஸ்ட்டுகள் அப்படி இல்லை. அருள்நிதியும் திரைப்படத்தில் நடித்த பலரும்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்” என கூறியுள்ளார்.

இன்னொருவர் “Worth ஆன திரைப்படம். சிறந்த திரைக்கதையை தேர்ந்தெடுப்பதில் அருள்நிதி தோற்பதே இல்லை. இயக்குனர் இன்னாசி பாண்டியன் நன்றாக திரைக்கதையை அமைத்திருக்கிறார்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “அருள்நிதியின் நடிப்பும், அவரின் கதை தேர்வும் நெருப்பாக உள்ளது. இயக்குனர் இன்னாசியின் சிறப்பான மிஸ்ட்ரி த்ரில்லர். Worth ஆன திரைப்படம்” என கூறியுள்ளார்.

ஒருவர் “அடேங்கப்பா, டிவிஸ்ட்டெல்லாம் பயங்கரமாக இருக்கிறது. திரைப்படத்தை தவறவிட்டுவிடாதீர்கள். அருள்நிதி மீண்டும் ஜெயித்துவிட்டார். வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top