REVIEW
கோப்ரா எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்க??
சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “கோப்ரா” திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
இன்று அதிகாலை 4 மணி காட்சிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் அலைமோதினர். பல மாதங்களாக “கோப்ரா” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஒரு வழியாக இன்று வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் சென்றுள்ளனர்.
“கோப்ரா” திரைப்படத்தின் முதல் காட்சி பார்த்தவர்களிடம் இருந்து ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ்களே வருகின்றன. குறிப்பாக ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை வேற லெவலில் இருப்பதாக கூறுகின்றனர்.
“கோப்ரா” திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி, கே எஸ் ரவிக்குமார், இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், ரோபோ ஷங்கர், ரோஷன் மாத்யூ என பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் “கோப்ரா” திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “Second half நன்றாக உள்ளது. சீயான் விக்ரமிற்கு இது ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “திரைப்படத்தில் நடிகர்களின் நடிப்பு, இசை, ஸ்கிரிப்ட் எல்லாம் சிறப்பாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “முதல் பாதி ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது. பின்னணி இசை நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
ஒருவர் “படம் ஓரளவு பரவாயில்லை. விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். கதைக்களம் மோசமாக இருக்கிறது. பழைய அம்மா சென்ட்டிமென்ட். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சீயான் விக்ரமிற்காக ஒரு முறை பார்க்கலாம்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “படத்தின் கான்செப்ட் தனித்துவமாக இருக்கிறது. இயக்கம் நன்றாக இருக்கிறது. கிளைமேக்ஸ், புரொடக்சன் டிசைனிங் நன்றாக இருக்கிறது. விருதுக்கு தகுதியுடைய நடிப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். 20 கெட் அப்பில் வருகிறார். இர்ஃபான் பதானை திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “சீயான் விக்ரம் கேரியரிலேயே சிறந்த திரைப்படம்” என கூறியுள்ளார்.