REVIEW
“காதலும் ஒரு அரசியல் தான்”.. நட்சத்திரம் நகர்கிறது.. A Short Review
பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன் ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
பாண்டிச்சேரியில் ஒரு நாடக குழுவில் இருக்கும் துசாரா விஜயனும் காளிதாஸ் ஜெயராம் காதலித்து வரும் நிலையில் ஜாதி குறித்த வாக்குவாதத்தில் இருவரும் பிரிகிறார்கள். அந்த நாடக குழுவில் ஓரின காதலர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணை திருமணம் செய்துகொண்ட திருநங்ககையும் இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவில் கலையரசன் அந்த நாடக குழுவில் வந்து சேர்கிறார். அவருக்கும் அந்த குழுவில் இருக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து ஜாதி ஆணவ கொலைகள் பற்றிய ஒரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என அவர்கள் யோசிக்கும் போது அவர்களுக்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி அந்த நாடகம் அரங்கேறியதா? இல்லையா? என்பதே “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
துசாரா விஜயனின் ரெனெ என்ற கதாப்பாத்திரத்தை தனித்துவமாகவும் சிறப்பாகவும் வடிவமைத்துள்ளார் பா ரஞ்சித். படம் முழுவதிலும் தனது அசத்தலான நடிப்பால் பார்வையாளர்களை ஓ போட வைக்கிறார் துசாரா.
கலையரசன், காளிதாஸ் ஜெயராம், சுபத்ரா ராபர்ட் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டென்மாவின் இசை காட்சிகளோடு இழையோடுகிறது.
படத்தில் இடம்பெற்ற வசனங்கள் எல்லாம் நச். ஜாதி, மதம், பாலினம் தாண்டிய காதலை ஒன் லைனாக கொண்டு மிகவும் துணிச்சலாக இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். செல்வாவின் படத்தொகுப்பு பக்கா.
படத்தின் மைனஸாக தெரிவது படத்தின் நீளம் தான். சற்று குறைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். மொத்தத்தில் ஜாதி மத பாலின பாகுபாடுகள் நிறைந்த சமூகத்துடன் ஒரு சிறப்பான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறது “நட்சத்திரம் நகர்கிறது”.
