REVIEW
“லைகர்” திரைப்படம் எப்படி இருக்கு.. மக்கள் என்ன சொல்றாங்க??
விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, மைக் டைசன் ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “லைகர்” திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இன்று பேன் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவந்துள்ளது “லைகர்”. இன்று அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கே ரசிகர்கள் பலர் திரையரங்குகளில் அலைமோதினர். இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன.
இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்துள்ளார். குத்துச்சண்டைகள் நிறைந்த ஆக்சன் திரைப்படமாக “லைகர்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “லைகர் திரைப்படம் டார்ச்சர் செய்துவிட்டது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால் மற்ற எதுவுமே சரியில்லை. இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வீணடித்துவிட்டார்கள்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “ஓரளவு நன்றாக வந்திருக்க வேண்டிய திரைப்படத்தை திரைக்கதையாலும் மதிப்பில்லாத காட்சிகளாலும் வீணடித்துவிட்டார்கள். விஜய் தேவரகொண்டா தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். சிறப்பாக நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் ஏற்று நடித்த திக்கு வாய் கதாப்பாத்திரம் எரிச்சலை உண்டு செய்கிறது. ஹீரோயின் பகுதிகள் நன்றாகவே இல்லை. சில காட்சிகளை தவிர குறிப்பிடும்படி எதுவுமே இல்லை” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “விஜய் தேவரகொண்டாவின் சிக்ஸ் பேக்ட்டை தவிர படத்தில் வேற பிளஸ்களே இல்லை. அனன்யாவின் காட்சிகள் அபத்தம். முதல் பாதியை தாங்கிக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மோசம். மைக் டைசன் காட்சியும் சிறப்பாக இல்லை” என கூறியுள்ளார்.
ஒருவர் “ஒரு மாஸ் ஆன கமெர்சியல் திரைப்படம்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “தாய்க்கும் மகனுக்குமான காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. ரம்யா கிருஷ்ணன், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நல்ல தேர்வு. பூரி ஜெகன்னாத் ஹீரோ கதாப்பாத்திரத்தை வடிவமைப்பதில் சிறப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. படம் பிளாக்பஸ்டர்” என கூறியுள்ளார்.