REVIEW
பா ரஞ்சித்தின் காதல் திரைப்படம் எப்படி இருக்கிறது?? மக்கள் என்ன சொல்றாங்க??
பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த “நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
“அட்டக்கத்தி” திரைப்படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” என்ற ஒரு முழு நீள காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் பா ரஞ்சித். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரிவ்யூக்கேளே வந்த வண்ணம் உள்ளது.
ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றை கடந்தது தான் காதல் என்ற ஒரு மையக்கருத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாகி இருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு துணிச்சலான முயற்சி என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், கலையரசன், ஹரி கிருஷ்ணன், சுபத்ரா ராபர்ட், ஷபீர் கல்லரக்கல் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு டென்மா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “இத்திரைப்படம் ஒரு மார்டன் காதலை பற்றி பேசக்கூடிய திரைப்படம். ஜாதி மற்றும் ஆணவக்கொலை குறித்து பேசுகிறது. மியூசிக் நன்றாக உள்ளது” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “தமிழ் சினிமாவின் தனித்துவமான சிறந்த இயக்குனராக பா ரஞ்சித் திகழ்கிறார். நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மூலம் பெரிய சர்ப்ரைஸை தந்துள்ளார். அவரது முந்தைய படங்களை விட மிகவும் வித்தியாசமாக உள்ளது” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “பா ரஞ்சித்தின் மற்றும் ஒரு மாஸ்டர் பீஸ். அவரால் மட்டுமே இதை செய்யமுடியும். துசாராவுக்கு இது வாழ்நாள் கதாப்பாத்திரமாக திகழும்” என கூறியுள்ளார்.
ஒருவர் “பா ரஞ்சித்திடம் இருந்து ஒரு மாஸ்டர் பீஸ். ஒரு துணிச்சலான திரைப்படம். காதலையும் அரசியலையும் காட்டியிருக்கிறது. காதலில் உள்ள அரசியலையும் காட்டியிருக்கிறார்” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “கலையரசன் மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இன்டர்வெல் காட்சியில் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. இத்திரைப்படம் உண்மையான அரசியலை பேசியிருக்கிறது. திரையரங்குகளில் காணத்தவறாதீர்கள்” என கூறியுள்ளார்.