HOLLYWOOD
“உலக படங்களை ஓரங்கட்டிய கடைசி விவசாயி”… வேற லெவல்
உலக திரைப்படங்களை ஓரங்கட்டி தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது கடைசி விவசாயி திரைப்படம்.
கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த திரைப்படம் “கடைசி விவசாயி”. ஒரு வயதான விவசாயி மயில்களை உயிரோடு புதைத்து விட்டார் என்று பொய் குற்றச்சாட்டு கூறி அவரை சிறையில் அடைத்து விடுகிறார்கள். அவரின் விவசாய நிலம் என்ன ஆனது? அதை அவர் காப்பாற்றினாரா? என்பதே கதை.
விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது குறித்தான விழிப்புணர்வோடு முருக கடவுளையும் மயில்களையும் குறியீடாக இணைத்து அழகாகவும் எந்த தொய்வும் இல்லாமல் நேர்த்தியாகவும் திரைப்படத்தை கொண்டு சென்றிருப்பார் இயக்குனர் மணிகன்டன். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ரச்சேல் ரபேக்கா, நல்லாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். இத்திரைப்படம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் லெட்டர்பாக்ஸ்டு என்ற பிரபலமான உலக சினிமா குழு ஒன்று இயங்கி வருகிறது. உலக சினிமாக்களில் தரமான சினிமாக்களை அறிமுகப்படுத்துவது, அது குறித்து உரையாடுவது என பல செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது இந்த குழு.
இந்த குழு சமீபத்தில் இந்த வருடத்தில் வெளியான சிறந்த உலக திரைப்படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பல உலக திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ICYMI: The Letterboxd Top 25 Highest Rated for first half of 2022: https://t.co/PSoDxqWe5j pic.twitter.com/yfRpaHE8ub
— Letterboxd (@letterboxd) July 3, 2022
அப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது “கடைசி விவசாயி” திரைப்படம். மேலும் இந்த பட்டியலில் 6 ஆவது இடத்தில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படமும் 11 ஆவது இடத்தில் “விக்ரம்” திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.