HOLLYWOOD
தனுஷின் “தி கிரே மேன்” இரண்டாம் பாகம் தயார்.. சூப்பர் அப்டேட்
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் “தி கிரே மேன்”. கிரிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி அர்மாஸ் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரமான லோன் உல்ஃப் எனப்படும் அவிக் சான் என்ற கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார்.
சிறு கதாப்பாத்திரமானாலும் தனது அசாத்திய ஆக்சன் பெர்ஃபார்மென்ஸால் ரசிகர்களை கவர்ந்திழுத்திருந்தார் தனுஷ். இத்திரைப்படம் ஒரு பக்காவான ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருந்தது. ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட “தி கிரே மேன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தனுஷ்.
தனுஷ் தனது டிவிட்டர் பக்கதில் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “தி கிரே மேன் யுனிவர்ஸ் நீள்கிறது, இதன் இரண்டாம் பாகம் வரப்போகிறது, லோன் உல்ஃப் தயார், நீங்கள் தயாரா?” என குறிப்பிட்டுள்ளார்.
The Gray Man universe is expanding and the sequel is coming… Lone Wolf is ready, are you? #TheGrayMan @agbofilms @netflix @Russo_Brothers pic.twitter.com/b8FuJk9koJ
— Dhanush (@dhanushkraja) August 6, 2022
இதில் இருந்து “தி கிரே மேன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரப்போகிறது என தெரியவருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் தனுஷும் இடம்பெறுகிறார் எனவும் தெரியவருகிறது.
“தி கிரே மேன்” திரைப்படத்தை ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். இவர்கள் “கேப்டன் அமெரிக்கா”, “அவஞ்சர்ஸ்” என பல மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களை இயக்கியிருக்கின்றனர்.
தனுஷ் இதற்கு முன் “தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து “தி கிரே மேன்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.