HOLLYWOOD
“ராஜமௌலியை வைத்து படம் தயாரிக்க வேண்டும்”.. ஹாலிவுட் இயக்குனர்களின் விருப்பத்தை பாருங்க…
ராஜமௌலியை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படத்தை இயக்கியவர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ். “தி கிரே மேன்” திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸில் வெளிவருகிறது.
இந்நிலையில் ருஸ்ஸோ பிரதர்ஸ் நேற்று இந்தியா வந்திருந்தனர். அப்போது அவர்களை பேட்டி எடுத்த நிருபர் “இந்தியாவில் எந்த நடிகருடன் பணியாற்ற விருப்பம்?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ருஸ்ஸோ பிரதர்ஸ் “இந்தியாவில் திறமையானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆர் ஆர் ஆர் மிகவும் அசத்தலான திரைப்படம். ஆதலால் அத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலியை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம்” என கூறினர்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் உலகளவில் பல அங்கீகாரத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக நடத்தப்படும் “ஹாலிவுட் கிரிடிக் அசோஷியேசன் மிட் சீசன்” விருது விழாவில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் “Cha Cha”, “Elvis”, “Marcel”, “Batman” “The North Man”, “Massive Talent”,”Top Gun Maverick”, “Turning Red” ஆகிய பிரபல ஹாலிவுட் திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ரன்னர் அப் வரை வந்தது குறிப்பிடத்தக்கது.