HOLLYWOOD
பட்டாலும் திருந்தாத ஆம்பேர் ஹெர்ட்… புதுசா வக்கீல்களை இறக்கப் போறாங்களாம்..
ஹாலிவுட் நடிகை ஆம்பேர் ஹெர்ட் தனது முன்னாள் கணவரான நடிகர் ஜானி டெப்பிற்கு எதிராக மீண்டும் களமிறங்க புது யுக்தியை கையாளப்போகிறாராம்.
ஆம்பர் ஹெர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு வாசிங்க்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கை மூலமாக தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை உடல் ரீதியாக துன்பப்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை வைத்தார். அந்த கட்டுரை வெளிவந்து ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இது குறித்த அவதூறு வழக்கு சில வருடங்களாக விர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆம்பேரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என விர்ஜினியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும் ஜானியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டு சாட்டியதற்காக ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. இதில் ஜானிக்கு 10 மில்லியன் டாலர்களும் நீதிமன்றத்திற்கும் 5 மில்லியன் டாலர்களும் என கூறப்பட்டது. இவ்வழக்கில் ஜானி டெப் ஜெயித்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர் .
இந்த சம்பவத்தால் ஆம்பேர் ஹெர்ட்டின் மானம் காற்றில் பறந்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அவரை பலரும் வெறுக்க ஆரம்பித்தனர். எனினும் இந்த வழக்கில் தான் மேல் முறையீடுக்கு செல்லப்போவதாக ஆம்பேர் ஹெர்ட் கூறிவந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆம்பர் ஹெர்ட் தனக்காக வாதாடிய பழைய வழக்கறிஞர்களை நீக்கிவிட்டாராம். புது வழக்கறிஞர்களை தற்போது ஆம்பர் ஹெர்ட் நியமித்துள்ளாராம். இவர்களை வைத்து இந்த வழக்கை சந்திக்க போகிறாராம்.
“ஏற்கனவே இந்த வழக்கில் தோற்றுப்போனதால் நொந்து போன ஆம்பேர் ஹெர்ட் தற்போது மீண்டும் அவமானத்தை விலை கொடுத்து வாங்கப்போகிறார்” என ஹாலிவுட் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
