HOLLYWOOD
டைட்டானிக் திரைப்பட நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ஹாலிவுட்
பிரபல ஹாலிவுட் திரைப்படமான “டைட்டானிக்” திரைப்படத்தில் நடித்த நடிகர் திடீரென காலமானதால் திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம் “டைட்டானிக்”. இத்திரைப்படம் உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்ட திரைப்படம் ஆகும். 1912 ஆம் ஆண்டு வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கியது டைட்டானிக் என்ற சொகுசு கப்பல். அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
உலகின் சிறந்த காதல் திரைப்படம் என்ற பட்டியலில் எப்போதும் டாப் லிஸ்ட்டில் இருப்பது “டைட்டானிக்” தான். இதில் ஜாக் மற்றும் ரோஸாக நடித்திருந்த லியோனார்டோ டிகாப்ரியா-கேட் வின்ஸ்லட் ஜோடியை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு ஒரு யதார்த்த காதல் ஜோடியாக இருவரும் “டைட்டானிக்” திரைப்படத்தில் கலக்கியிருப்பார்கள்.
குறிப்பாக இருவரும் கப்பலின் முனையில் இரு கைகளையும் விரித்தபடி முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி இப்போதும் பிரபலமான ஒன்றாகும். “டைட்டானிக்” கப்பல் மூழ்கிய பிறகு ரோஸை காப்பாற்றிவிட்டு ஜாக் கடலுக்குள் விழுந்து இறந்துவிடும் காட்சியில் கண்ணீர் வடிக்காத பார்வையாளர்களே இல்லை.
“டைட்டானிக்” திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் இயக்கியிருந்தார். இவர் இதற்கு பின் “அவதார்” என்ற மாபெரும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கினார். “அவதார் “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது.
இந்நிலையில் “டைட்டானிக்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் வார்னர் உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஹாலிவுட்டில் “தி ஓமன்”, “தி ஓசியன்”, “தி லாஸ்ட் வேர்ல்டு” என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இச்செய்தியால் ஹாலிவுட் திரைத்துறையினர் சோகத்தில் உள்ளனர்.
