Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெளிநாட்டு இயக்குனர்களை வணக்கம் போட வைத்த தனுஷ்.. வைரல் புகைப்படம்

HOLLYWOOD

வெளிநாட்டு இயக்குனர்களை வணக்கம் போட வைத்த தனுஷ்.. வைரல் புகைப்படம்

தனுஷ் வெளிநாட்டு இயக்குனர்களை வணக்கம் போட வைத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் தான் தனுஷ் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்திய திரையுலகமே அவரை “ஆ” என பார்த்தது. அதன் பின் ஹிந்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தான் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற சுவாரசியமான தகவல் வந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்கள் காத்திருந்தது போல் “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலர்  சமீபத்தில் வெளிவந்தது. மேலும் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

அந்த காட்சியை “தி கிரே மேன்” திரைப்படத்தின் இயக்குனர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் வெளியிட்டனர். “தி கிரே மேன்” திரைப்படத்தில் அவிக் சான் என்ற கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். கொலைகளை செய்யும் Assassin கதாப்பாத்திரமான ஆவிக் சான் “தி கிரே மேன்” திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக அறியப்படுகிறது.

இந்நிலையில் “தி கிரே மேன்” திரைப்படத்தின் இயக்குனர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் தனுஷை நேரில் சந்தித்தனர். அப்போது தனுஷ் அவர்களை வணக்கம் சொல்ல வைத்து தானும் வணக்கம் சொல்வது போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படத்தை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“தி கிரே மேன்” திரைப்படம்  நாளை “நெட்ஃபிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதில் தனுஷுடன் ரியான் கோஸ்லிங், கிரிஸ் ஈவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகிய பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top