HOLLYWOOD
“தோர்” சுத்தியல் தான் மின்னலை வரவழைத்தது…?”.. ரசிகருக்கு தெளிவுபடுத்திய சூப்பர் ஹீரோ
மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் “தோர்” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், தனது ரசிகர் ஒருவர் பதிவிட்ட மின்னல் வீடியோவிற்கு தான் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
மார்வெல் திரைப்படங்களில் மிகவும் அதிக பிரபலமான சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களில் ஒன்று “தோர்”. இந்த கதாப்பாத்திரம் கிரேக்க புராணத்தில் “மின்னல் கடவுள்” என்று அழைக்கப்படுவார்.
இதனை வைத்து தான் “தோர்” கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருப்பார்கள். இந்த “தோர்” கதாப்பாத்திரத்தின் கையில் ஒரு சுத்தியல் இருக்கும். அந்த சுத்தியலின் பெயர் “Mjollnir”. இந்த சுத்தியல் மின்னலை உருவாக்கும் வல்லமை படைத்தது.
மார்வெல் திரைப்பட வரிசையில் “தோர்” கதாப்பாத்திரத்தில் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் என்ற பிரபல பாலிவுட் நடிகர் நடித்து வருகிறார். இவர் “ரஷ்”, “எக்ஸ்ட்ராக்சன்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஹாலிவுட் டெலிவிஷன் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மொரிசா ஸ்குவாட்ஸ் என்ற பெண்மணி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் மழை பெய்த போது ஒரு பயங்கரமான மின்னல் ஒன்று உருவாகியதை பார்த்துள்ளார். அப்போது அதனை வீடியோவாக ரெக்கார்ட் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். மேலும் அதில் “Thor?” என குறிப்பிட்டிருந்தார். அதாவது தோர் தான் இந்த மின்னலுக்கு காரணமா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். அதாவது “அது நான் இல்லை. அது ஜீயஸ் கடவுள் தான்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். அதாவது ஜீயஸ் என்ற கடவுள் கிரேக்க புராணத்தில் “வானத்தின் கடவுள்” என்று அழைக்கப்படுபவர். தற்போது இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
That was Zeus https://t.co/djoqiWUFfV
— Chris Hemsworth (@chrishemsworth) August 31, 2022
