HOLLYWOOD
ஹாலிவுட்டிற்கு செல்லும் அல்லு அர்ஜூன்..?? மாஸ் தகவல்
அல்லு அர்ஜூன் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜூன் தற்போது “புஷ்பா 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார். அப்போது அவர் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்ததாகவும் அவர் தயாரிக்க உள்ள ஹாலிவுட் திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.
“புஷ்பா” திரைப்படம் வெளியான எல்லா மொழிகளிலும் மாஸ் ஹிட் ஆனது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “உ சொல்றியா”, “சாமி” ஆகிய பாடல்கள் இப்போதும் டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், அல்லு அர்ஜூன் ஆகிய இருவரை சுற்றியே திரைக்கதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளதாகவும் அவருக்கு தான் திரைப்படத்தில் முக்கிய ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. “புஷ்பா 2” திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் அல்லு அர்ஜூன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.