Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“என்ன தான் ஆச்சு பிரியங்கா தேஷ்பாண்டேக்கு?” ஏன் இப்படி பண்றார்?

TELEVISION

“என்ன தான் ஆச்சு பிரியங்கா தேஷ்பாண்டேக்கு?” ஏன் இப்படி பண்றார்?

விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே ஒரு புதுமையான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியங்கா தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்போதும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை. தொகுப்பாளராக மட்டும் அல்லாமல் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அதில் எல்லாருக்கும் கட்டிப் பிடி வைத்தியம் செய்து கொண்டிருந்தார். சக கன்டஸ்டுகளை அன்பினால் சொக்க வைத்தார். மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எமோஷனல் ஆனார்.

அவரும் ராஜூ ஜெயமோகனும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ராஜூவை அவர் “ஹே கோபால்” என கூறுவது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க வாரத்தில் அபிஷேக்குடனும் நிரூப்புடனும் மிகவும் நெருக்கமாக பழகினார். அபிஷேக் வெளியேற்றப்பட்ட போது பெரிதும் கலங்கினார்.

அதே போல் வைல்ட் கார்டில் அபிஷேக் மீண்டும் உள்ளே வந்தபோது பிரியங்காவுக்கு குஷி தாங்க முடியவில்லை. மீண்டும் மூவரும் நண்பர்களாக இணைந்தனர். ஆனால் சில நாட்களிலேயே அபிஷேக் மீண்டும் வெளியேற்றப்பட்டார்.

அப்போது “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை” என அழுது புலம்பி கொண்டிருந்தார். பிக் பாஸ் இறுதி வாரம் வரை சென்ற பிரியங்கா டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்தார். ராஜூ ஜெயமோகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித்தியாசமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் மற்றும் அல்லாது அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றிருக்கின்றனர். அதில் மூவரும் முதலில் தங்களது பாதங்களை காட்டுகிறார்கள். பின்பு மூவரும் வித்தியாசமான முறையில் சுற்றி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading

More in TELEVISION

To Top