TELEVISION
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளமா? அடேங்கப்பா!!
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சி “பிக் பாஸ்”. இந்தியாவில் ஹிந்தியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாகியுள்ளது.
தமிழில் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
“பிக் பாஸ்” நிகழ்ச்சி ஹிந்தியில் 16 ஆவது சீசனை நெருங்கி உள்ளது. இதனை கடந்த 4 ஆவது சீசனில் இருந்து சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிறகு இந்த நிகழ்ச்சி வேற லெவலில் ரீச் ஆனது.
சல்மான் கான் முதலில் தொகுத்து வழங்க தொடங்கிய போது அவருடைய சம்பளம் ஒரு எபிசோட்டுக்கு ரூ. 2. 5 கோடியாக இருந்தது. அதன் பின் ஒவ்வொரு சீசனிலும் அவருடைய சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே சென்றார். இந்த நிலையில் தற்போது சல்மான் கான் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் 16 ஆவது சீசனை தொகுத்து வழங்க ஒரு எபிசோட்டுக்கு ரூ. 43.75 கோடி கேட்டுள்ளாராம்.
இதனை வைத்து பார்த்தால் மொத்த சீசனுக்கு ரூ. 1050 கோடி வருகிறதாம். எனினும் சல்மான் கான் கேட்ட இந்த தொகைக்கும் சரி என்றும் தலையாட்டியுள்ளதாம் தொலைக்காட்சி நிர்வாகம். இந்த செய்தி தான் தற்போது பாலிவுட்டில் டாக் ஆஃப் தி டவுனாக வைரல் ஆகி வருகிறது.