TELEVISION
பாரதியின் மருத்துவமனையை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள்.. இது அதுல??
“பாரதி கண்ணம்மா” தொடரில் மருத்துவமனையை ஹைஜாக் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” தொடரில் பாரதி ஒரு புதிய மருத்துவமனையை நிறுவினார். கண்ணம்மா அந்த மருத்துவமனையில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த புரோமோவில் அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த கண்ணம்மா, மற்றும் பல நோயாளிகள், நர்ஸ்கள் என அனைவரையும் பணயமாக வைத்துள்ளனர் தீவிரவாதிகள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாரதியும் அவரது குடும்பமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தீவீரவாதிகளிடம் இருந்து மருத்துவமனையை எப்படி மீட்கலாம் என யோசித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் தீவிரவாத கூட்டத்தின் தலைவர் கண்ணம்மாவிடம் “எனக்கு மொத்தம் மூன்று கோரிக்கை உள்ளது. உங்கள் உயிர் அரசுக்கு முக்கியமில்லை என்றால் நான் உங்களை சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்” என கூறுகிறார். இதனை கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். கண்ணம்மாவுடன் அவரது பெண் குழந்தையும் உடன் இருக்கிறார். அப்பெண் குழந்தை கண்ணம்மாவிடம் “எனக்கு பயமாக இருக்கிறது” என அழுகிறார். இவ்வாறு இந்த புரோமோ அமைந்துள்ளது.
இந்த புரோமோ வெளியானவுடனே இணையத்தில் “பீஸ்ட் திரைப்படத்தை காப்பி அடிக்கப்போகிறார்கள்” என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
தனது இரு குழந்தைகளுக்கும் “நான் தான் தாய்” என கண்ணம்மா வெளிப்படையாக கூறினார். அதன் பின் பல திருப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக இந்த புரோமோ அமைந்துள்ளது. மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்களை பாரதி எப்படி மீட்கப்போகிறார்? பாரதி மருத்துவனையில் புகுந்த தீவிரவாதிகளை எப்படி கையாளப்போகிறார்? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் மருத்துவமனையில் கண்ணம்மாவும் அவரது மகளும் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டுள்ளதால் இந்த சம்பவம் பாரதியின் மனதில் கண்ணம்மா மீது காதல் வளர காரணமாக அமையுமா? பாரதி, கண்ணம்மாவின் மீதுள்ள சந்தேகத்தை தகர்த்து எறிந்து அவரை ஏற்றுக்கொள்வாரா? என்பதையும் பார்க்கலாம்.