TELEVISION
கமல் ஹாசனை தொடர்ந்து தொகுப்பாளராக களமிறங்கும் ஜீவா…
கமல் ஹாசனை தொடர்ந்து ஒரு பிரபல ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் கேம் ஷோவிற்கு தொகுப்பாளராக களமிறங்க உள்ளார் ஜீவா.
வெகு ஜனங்களின் பொழுதுப்போக்கில் ஓடிடி தளம் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது. தொடக்கத்தில் ஓடிடி தளங்கள் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில் இணையம் என்றைக்கு மலிவாக மாறியதோ அன்றிலிருந்து ஓடிடி தளங்கள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.
குறிப்பாக கொரோனாவிற்கு பின் ஓடிடி தளங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. வெப் சீரீஸ் மட்டுமே தயாரித்துக்கொண்டிருந்த ஓடிடி தளங்கள் திரைப்படங்களையும் தயாரிக்கத் தொடங்கின.
அது மட்டுமல்லாது பல சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகிறது. குறிப்பாக அமேசான் பிரைம் “காமிக்ஸ்தான்” போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம். மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற “பிக் பாஸ்” நிகழ்ச்சி “பிக் பாஸ் அல்டிமேட்” என்ற பெயரில் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் கமல் ஹாசனைத் தொடர்ந்து தற்போது ஜீவா ஒரு கேம் ஷோவை தொகுத்து வழங்க உள்ளார். ஆம்! ஆஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய கேம் ஷோவை நடிகர் ஜீவா தொகுத்து வழங்க உள்ளார். “சர்க்கார் வித் ஜீவா” என்ற டைட்டிலை உடைய இந்த கேம் ஷோ விரைவில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ வீடியோவை ஆஹா தமிழ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
ஜீவா தற்போது “காஃபி வித் காதல்”,”கோல் மால்”, “வரலாறு முக்கியம்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹிந்தியில் “83” திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.