TELEVISION
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் ஜிபி முத்து.. சிறப்பான சம்பவமா இருக்கப்போகுது..
யூட்யூப் புகழ் ஜிபி முத்து “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
யூட்யூப் மூலம் பலருக்கும் பரவலாக அறியப்பட்டவர் ஜிபி முத்து. அவர் பேசும் தூத்துக்குடி பாஷை மிகவும் கலகலப்பாக இருக்கும். “செத்த பயலே”, “நாரப்பயலே” என அவர் திட்டுவதை ரசிப்பவர்கள் பலர் உண்டு.
தொடக்கத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூட்யூப் சேன்னல் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு வரும் லெட்டர்களை படிப்பது போல் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அந்த வீடியோ பலருக்கும் ஒரு ஸ்டெர்ஸ் பஸ்ட்டராக திகழ்ந்து வருகிறது.
தற்போது ஜிபி முத்து சினிமா நடிகர் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் என்று கூறினாலும் அது மிகையாகாது. இவர் எங்கே சென்றாலும் இவருடன் செல்ஃபி எடுக்க ஒரு கூட்டம் இருக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ஜிபி முத்து.
கடந்த “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சிக்கு ஜிபி முத்து அழைக்கப்பட்டதாகவும் அவர் கலந்துகொள்ள மறுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் தற்போது யூட்யூப் பிரபலம் ஜிபி முத்து கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.