TELEVISION
தீவிரவாதிகளிடம் சிக்கி தவிக்கும் கண்ணம்மா… அய்யோ!!
பாரதியின் மருத்துவமனை தீவிரவாதிகளால் ஹைஜேக் செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” தொடரில் பாரதி ஒரு புதிய மருத்துவமனையை நிறுவினார். கண்ணம்மா அந்த மருத்துவமனையில் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜேக் செய்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த கண்ணம்மா, மற்றும் பல நோயாளிகள், நர்ஸ்கள் என அனைவரையும் பணயமாக வைத்துள்ளனர் தீவிரவாதிகள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாரதியும் அவரது குடும்பமும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தீவீரவாதிகளிடம் இருந்து மருத்துவமனையை எப்படி மீட்கலாம் என யோசித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் தீவிரவாத கூட்டத்தின் தலைவர் கண்ணம்மாவிடம் “எனக்கு மொத்தம் மூன்று கோரிக்கை உள்ளது. உங்கள் உயிர் அரசுக்கு முக்கியமில்லை என்றால் நான் உங்களை சுட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பேன்” என கூறினார்.
அதனை தொடர்ந்து அவர்களுடைய கோரிக்கையை அரசிடம் தெரிவித்துள்ளார்கள் தீவிரவாதிகள். இந்த நிலையில் மருத்துவமனை நர்ஸுகள் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகள் நிலைமையையும் பெற்றோர்களின் நிலைமையையும் குறித்து கவலைப்பட்டு வருகின்றனர்.
மேலும் கண்ணம்மாவின் மகள் “எப்போது அம்மா வீட்டுக்குப் போவோம்” என அழுகுறாள். அவளை கண்ணம்மா தைரியப்படுத்துகிறார். தீவிரவாதிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை அவர்களை என்ன பாடு படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சமீபத்தில் தனது இரு குழந்தைகளுக்கும் “நான் தான் தாய்” என கண்ணம்மா வெளிப்படையாக கூறினார். அதன் பின் பல திருப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக மருத்துவமனையை தீவிரவாத கும்பல் ஹைஜேக் செய்துள்ளது. மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்களை பாரதி எப்படி மீட்கப்போகிறார்? கண்ணம்மா மருத்துவனையில் புகுந்த தீவிரவாதிகளை எப்படி கையாளப்போகிறார்? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
