TELEVISION
பிபி ஜோடிகள் ஃபைனல்ஸில் நடந்த தரமான சம்பவம்… யார் வின்னர் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் யார் டைட்டிலை வென்றது தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு நடத்தப்படும் நடன போட்டி தான் “பிபி ஜோடிகள்” நிகழ்ச்சி. கடந்த வருடம் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பானது. அதில் அனிதா சம்பத்-ஷாரிக் ஜோடி டைட்டிலை வென்றனர்.
இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் கணேஷ்-ஹராத்தி, அமீர்-பாவனி, இசைவாணி-வேல்முருகன், ஐக்கி பெரி-தேவ், அபிஷேக்-சுருதி, சுஜா-சிவக்குமார், தாமரை-பார்த்தசாரதி ஆகிய ஜோடிகள் கலந்துகொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் அமீர்-பாவனி, சுஜா சிவக்குமார் ஆகிய ஜோடிகள் வெறித்தனமாக நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் அமீர்-பாவனி ஜோடி தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சிறப்பான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது நடுவர்களான சதீஷும் ரம்யா கிருஷ்ணனும் திடீரென அமீர் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரின் கைகளையும் தூக்கி இரண்டு ஜோடிகளுமே டைட்டில் வின்னர் என அறிவித்தனர். இதனால் இரண்டு ஜோடிகளுமே மகிழ்ச்சியில் துள்ளினர். டைட்டில் வின்னருக்கான 5 லட்சத்தை இரண்டு ஜோடிகளும் சரி சமமாக பிரித்துக்கொண்டனர்.
சிறப்பாக நடனமாடி மக்களின் மனதை கவர்ந்த அமீர்-பாவனி ஜோடி தான் வெற்றிப் பெறுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் அமீர்-பாவனி ஜோடியுடன் சுஜா-சிவக்குமார் ஜோடியையும் சேர்த்து டைட்டில் வின்னராக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.