TELEVISION
பிக் பாஸ் சீசன் 6 coming soon… விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோ
“பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.
சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். ஒரு வீட்டிற்குள் பல நபர்களை ஒன்றாக தங்கவைத்து அவர்களுக்கிடையே போட்டிகளை வைத்து விறுவிறுப்பை கூட்டும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் வந்தபோதே டிஆர்பியில் மாஸ் காட்டியது.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரசிகர்கள் பெரும்பாலும் பிக் பாஸையே விரும்பி பார்ப்பார்கள். இந்த டிஆர்பியை உடைப்பதற்கு பல சேன்னல்கள் முயன்று பார்த்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியே முன்னணியில் இருக்கிறது.
“பிக் பாஸ்” சீசன் 1க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் வர ஆரம்பித்தன. இதுவரை 5 சீசன்கள் வந்துள்ளன.
“பிக் பாஸ்” சீசன் 5-ல் ராஜூ ஜெயமோகன் டைட்டிலை தட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து சீசன் 6 குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது “பிக் பாஸ்” சீசன் 6 குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் சீசன் 6 தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதனை கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா? அல்லது சிம்பு? தொகுத்து வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
“பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, யூட்யூப் புகழ் ஜிபி முத்து ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. மேலும் பிரபலங்கள் மட்டுமல்லாது பொது ஜனங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையலாம் என சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.