TELEVISION
காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த பாவனி… குஷியில் அமீர்…
அமீர், பாவனியை ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் தற்போது காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் பாவனி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜோடி அமீர்-பாவனி. பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்த அமீர், பாவனியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.
மேலும் அமீர் பாவனியிடம் தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தினார். ஆனால் பாவனி மறுத்துக்கொண்டே வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றனர்.
இதில் பல முறை அமீர் தன்னுடைய காதலை பாவனியிடம் வெளிப்படுத்தி வந்தார். ஒரு சமயத்தில் பாவனி “அமீர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு டைம் வேண்டும்” என கூறினார்.
சமீபத்தில் இப்போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. அதில் அமீர்-பாவனி, சுஜா-சிவக்குமார் ஆகிய ஜோடிகள் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் பாவனி தனது இன்ஸ்டா பக்கத்தில் “அமீரை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. நடனம் தான் எனக்கு மிகப்பெரிய சவால். அதுவும் நடனப்போட்டி என்ற உடன் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் அமீர் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டார்” என கூறினார்.
மேலும் அதில் “அமீர், நீ மிகச்சிறந்த மாஸ்டர், சிறந்த நண்பன். இப்போது நாம் இருவரும் நம்முடைய வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கலாம். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அமீர், நீ இனிமேல் எப்போதும் என்னுடையவனாக இருப்பாயா.. ஐ லவ் யூ” என குறிப்பிட்டு பாவனி அமீரின் காதலுக்கு ஓகே சொல்லியுள்ளார்.
View this post on Instagram