Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இவங்க என்னைய ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க”… விஜய் டிவி தொகுப்பாளினியின் நேரடி வாக்குமூலம்

TELEVISION

“இவங்க என்னைய ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க”… விஜய் டிவி தொகுப்பாளினியின் நேரடி வாக்குமூலம்

தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான ஜாக்குலின் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடக்கத்தில் Chubby ஆக இருக்கும் நடிகைகள் காலப்போக்கில் ஜிம்மிற்கு சென்று தனது உடல் எடையை குறைத்து சிக்கென்று Transformation ஆவது வழக்கம் தான். ஹன்சிகா மோத்வானி, ஆலியா பட், கீர்த்தி சுரேஷ், டாப்ஸி என இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். இவ்வாறு பலரும் Transformation எடுப்பதால் தற்போது ஜாக்குலினும் இந்த முடிவை எடுத்து, சமீப காலமாக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து Transformation ஆகி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்தவர் ஜாக்குலின். இவர் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின் “கோலமாவு கோகிலா” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேன்மொழி பிஏ” என்ற தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தனது Chubby கன்னங்களால் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட ஜாக்குலின் ஜிம்முக்கு சென்று வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்தார். ஆதலால் இப்போது பார்ப்பதற்கே டாப் மாடலாக திகழ்கிறார்.

சமீபத்தில் கூட அசரவைக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது தன்னை கொடுமை செய்வதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வரும் ஜாக்குலின் “என்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள். என்னால் சுத்தமாக முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. வாந்தி எடுத்தால் கூட வாந்தி தானே எடுத்துவிட்டு வாருங்கள் என சொல்கிறார்கள்.

உள்ளே Lungs எல்லாம் வலிக்கிறது. கேட்டால் எல்லாம் நார்மல் தான் என்று சொல்கிறார்கள். ஒரு மூணு நாள் எழுந்திருக்கவே முடியவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. பார்ட் 2 –ல் சொல்கிறேன்” என கலகலப்பாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top