REVIEW
“விருமன்” எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்க ன்னு பாக்கலாம்..
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி ஆகியோர் நடித்த “விருமன்” திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான “விருமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோருடன் சூரி, பிரகாஷ் ராஜ், ஆர் கே சுரேஷ் என பலரும் நடித்துள்ளனர். தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இத்திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
“கொம்பன்” திரைப்படத்திற்கு பிறகு “விருமன்” திரைப்படத்தில் கார்த்தி-முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. முத்தையாவின் பாணியில் முழுக்க முழுக்க கிராமத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதையம்சத்தைக் கொண்ட “விருமன்” திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இத்திரைப்படத்தை குறித்து என்ன கூறுகிறார்கள் என பார்க்கலாம்.
ஒருவர் “முதல் பாதி அருமையாக உள்ளது. நல்ல பொழுதுபோக்கான குடும்பத்திரைப்படம். இடைவேளை காட்சி அட்டகாசம். கார்த்தி தீயாக நடித்திருக்கிறார். அதிதி ஷங்கர் நல்ல அறிமுகம். பிரகாஷ் ராஜ் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். அம்மா சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “முத்தையா நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார். இடைவேளை காட்சி அட்டகாசம்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “முதல் பாதி எமோஷனும் மாஸும் கலந்து இருக்கிறது. முத்தையா ஸ்டைலில் இருக்கிறது. கார்த்தியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. அதிதி ஷங்கர் நல்ல அறிமுகம். சூரி காமெடி நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
ஒருவர் “குடும்பங்கள் பார்க்ககூடிய நல்ல மாஸ் என்டெர்டெயினராக இருக்கிறது. கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் நடிப்பு நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
மற்றொருவர் “விருமன் படம் வெறித்தனமாக இருக்கிறது. கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பு நன்றாக இருக்கிறது. அதிதி ஷங்கர் எக்ஸ்பிரஷன்ஸ் நன்றாக இருக்கிறது. பக்காவான குடும்பத் திரைப்படம்” என கூறியுள்ளார்.
இன்னொருவர் “வழக்கமா கொஞ்சம் பரபரப்பா இருக்கிறவர் இந்த முறை பொறுமையாக கையாண்டிருக்கிறார். புதிதாக ஒன்றும் இல்லை. கேமரா ஒர்க், இசை நன்றாக இருக்கிறது. கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். பி மற்றும் சி சென்டர்களில் படம் தப்பித்துவிடும்” என கூறியுள்ளார்.