Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“Once upon a time, there lived a ghost”… யார் அந்த கோஸ்ட்?… “விக்ரம்” A Short Review..

REVIEW

“Once upon a time, there lived a ghost”… யார் அந்த கோஸ்ட்?… “விக்ரம்” A Short Review..

கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

Drug Lord சந்தானத்தின் (விஜய் சேதுபதி) பல கோடி ரூபாய் சரக்கு விக்ரம் (கமல் ஹாசன்) மகன் சீக்ரெட் ஏஜென்ட் பிரபஞ்சனிடம் (காளிதாஸ் ஜெயராம்) கிடைக்கிறது. இதனை பதுக்கி வைக்கும் காளிதாஸை விஜய் சேதுபதி ஆட்கள் முக மூடி அணிந்த கும்பலாக வந்து கொன்று விடுகிறார்கள். எனினும் விஜய் சேதுபதிக்கு சரக்கு கிடைக்கவில்லை. அதே போல் அந்த முகமூடி அணிந்த கும்பல் பல பேரை கொள்கிறது.

இந்த கொலைகளை கண்டறிய அமர் (ஃபகத் ஃபாசில்) தலைமையில் ஒரு ஸ்பெஷல் ஃபோர்ஸ் உருவாகிறது. இதனிடையே தன் மகனை கொன்றவர்களை தேடியும் போதை பொருளை ஒழிக்கவும் மறைந்திருந்து பாடுபட்டு கொண்டிருக்கிறார் கமல். இதனை தொடர்ந்து ஃபகத் ஃபாசில் விசாரணையில் பல புது புது விஷயங்களை கண்டுபிடித்து வருகிறார். ஃபகத் ஃபாசில் இறுதியில் ஒரு முடிவை எட்டினாரா? கமல் ஹாசன் தன்னுடைய தேடலை முடித்தரா? என்பது தான் “விக்ரம்” திரைப்படத்தின் கதை.

லோகேஷ் கனகராஜ் தனது முந்தைய திரைப்படமான “கைதி” திரைப்படத்தின் ஓர் அம்சத்தையும், 1986 ஆம் ஆண்டு வெளிவந்த “விக்ரம்” திரைப்படத்தின் பல அம்சங்களையும் இணைத்து ஒரு புது Universe ஐ உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக படத்தின் இன்டர்வெல் காட்சியில் வரும் முக்கியமான டிவிஸ்ட் ரசிகர்களை “ஓ” போட வைத்துள்ளது.

கமல் ஹாசன் திரையில் தீயாக வலம் வருகிறார். ஆக்சன் காட்சிகளிலும் சென்டிமென்ட் காட்சிகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார். Drug lord ஆக வரும் விஜய் சேதுபதி மாஸ் வில்லனாக Terror லுக்கில் அசத்துகிறார். ஃபகத் ஃபாசில் வழக்கம்போல் தன்னுடைய யதார்த்தமான நடிப்பில் மாஸ் காட்டுகிறார்.

நரேன், காளிதாஸ் ஜெயராம், நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி ஆகியோர் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். அனிருத்தின் இசை திரைக்கதையின் ஓட்டத்தோடு வெறித்தனமாக இருக்கிறது. கிரீஷின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை மிரள வைக்கிறது. குறிப்பாக Gun firing காட்சியில் ஒளிப்பதிவாளர் மிரட்டியுள்ளார். பிளோமின் ராஜின் படத்தொகுப்பு அல்டிமேட். அன்பறிவு ஸ்டன்ட் காட்சிகள் பார்வையாளர்களை மிரள வைக்கிறது.

ஒரு Fan Boy ஆக தரமான சம்பவத்தை செய்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கிளைமாக்ஸில் வரும் சூர்யா (ரோலக்ஸ்) கதாப்பாத்திரம் மிரட்டலாக உள்ளது. சிறிது நேரமே தோன்றினாலும் மாஸ். “கைதி” திரைப்படத்தின் தில்லி கதாப்பத்திரத்தின் ஒரு சர்ப்ரைஸ் அம்சம் இதில் வருகிறது. ரோலக்ஸ், விக்ரம், தில்லி ஆகியோரை வைத்து அடுத்த திரைப்படத்திற்கான Lead ஒன்றை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். மொத்தத்தில் ஒரு பவர் பேக்ட் ஆக்சன் திரில்லர் படமாக ஒரு Fan boy ஆன லோகேஷ் கமல் ஹாசனுக்கும் நமக்கும் ஒரு மிக பெரிய பரிசை வழங்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top