TELEVISION
“வருண் – அக்சராவுக்கு திருமணமா?” வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
வருண்-அக்சரா இருவரும் திருமண கோலத்தில் காட்சி தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் “இருவருக்கும் திருமணமா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வருணும் அக்சராவும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கன்டெஸ்டுகளாக கலந்து கொண்டவரகள். பிக் பாஸ் வீட்டினுள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கமாக பழகி வந்தனர். இருவரும் காதலிக்கவில்லை எனவும் நட்பாக பழகி வருகின்றனர் எனவும் கூறிக்கொண்டனர்.
மேலும் அக்சராவின் அண்ணன் வீட்டிற்குள் வந்து “வருணை முழுமையாக நம்பு” என கூறிவிட்டு சென்றது அக்சராவுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து சில வாரங்களிலேயே வருணும் அக்சராவும் சேர்ந்தே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வருணும் அக்சராவும் திருமண கோலத்தில் சில வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தனர். ரசிகர்கள் “ஒஹோ, இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் போல” என வதந்தியை பரப்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் அந்த வீடியோ “மெகந்தி” என்ற திருமணம் சார்ந்த பிரபல மாத இதழுக்காக நடத்திய “cover shoot” எனவும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆனால் ரசிகர்கள் வருணும் அக்சராவும் இத்திருமண மாத இதழுக்கான “cover shoot” நடத்தியதே அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதை குறிப்பதற்காகத் தான் என வழக்கம் போல் வதந்தி பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் திருமணம் குறித்து இருவரும் எந்த தகவலும் பகிரவில்லை எனவும் இருவரும் இப்போதும் நண்பர்களே எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram