GOSSIPS
இது ஒரு ஹாலிவுட் கனவு பயணம்.. “நட்சத்திர” நடிகையின் பக்கா பிளான்
“நட்சத்திர” நடிகை தற்போது வெளிநாட்டில் சுற்றிக்கொண்டிருப்பது ஒரு பக்கா பிளான் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தமிழின் முன்னணி நட்சத்திரமாக திகழும் அந்த நடிகை, பல காலம் காதலித்து வந்த அந்த இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் சில நாட்கள் ஹனி மூனுக்கு வெளிநாட்டிற்கு பறந்த அவர்கள், பல ரொமான்ட்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது அந்த நடிகை இந்தியாவின் டாப் பாட்ஷா நடிகரோடு நடித்து வருகிறார். ஆனால் திடீரென படப்பிடிப்பின் இடைவேளையில் தனது கணவருடன் வெளிநாட்டிற்கு பறந்து உள்ளார் நடிகை.
இது வெறும் இன்பச் சுற்றுலா என்று அவர்கள் கூறி வந்தாலும் கோலிவுட்டில் இவர்களின் பயணம் குறித்த ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளதாம். அதாவது நடிகை தற்போது ஒரு உலகப்படத்தில் நடிக்கப் போகிறாராம். அதற்கான பணிகளுக்காகத்தான் வெளிநாடு சென்றிருப்பதாக கூறப்படுகிறதாம்.
நடிகை தற்போது இந்திய நடிகையாக வளர்ந்துள்ள நிலையில், அதற்கு அடுத்தக்கட்டம் என்பது ஹாலிவுட் திரைப்படம் என யோசித்து தற்போதே அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறதாம்.
சில மாதங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கப்போவதாக அதிர்ச்சியை கிளப்பினார். அதனை தொடர்ந்து திடீரென அவருக்கு பாலிவுட்டின் பாட்ஷாவுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
இந்த நிலையில் தான் தற்போது நடிகை தனது கணவருடன் ஒரு ஹாலிவுட் படத்தில் புக் செய்துகொள்வதற்காக பயணம் மேற்கொள்கிறாராம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. “கமுக்கமாக வேலை பார்க்கும் நடிகையின் யுக்தி வேற லெவல்” என கோலிவுட் வட்டாரங்களில் அந்த நடிகையை குறித்து கிசுகிசுக்கப்படுகிறது.