Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நான்காவது திருமணம் செய்த பிரபல அமெரிக்க நடிகை.. திரைத்துறையினர் வாழ்த்து..

HOLLYWOOD

நான்காவது திருமணம் செய்த பிரபல அமெரிக்க நடிகை.. திரைத்துறையினர் வாழ்த்து..

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகருமான ஜெனிஃபர் லோபஸ் நான்காவதாக பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

பிரபல பாடகரான ஜெனிஃபர் லோபஸ் பிரபல நடிகையும் கூட. இவர் “அனகோண்டா”, “ஏஞ்சல் ஐஸ்”, “கிக்லி”, “அவுட் ஆஃப் சைட்”, “எனஃப்”, “பார்டர் டவுன்” என பல பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 52.

ஜென்னிஃபர் லோபஸ் “கிக்லி” திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த பென் அஃப்லக் என்பருடன் பல நாட்கள் நெருங்கி பழகி வந்தார். ஆனால் அதன் பின் தங்கள் உறவை முடித்துக் கொண்டனர்.

ஜெனிஃபர் லோபஸ் பென் அஃப்லக்குடன் பழகுவதற்கு முன்னமே ஒஜானி நோவா என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணமான ஒரு வருடம் கழித்து இருவரும் பிரிந்துவிட்டனர். அதனை தொடர்ந்து நடிகர் கிரிஸ் ஜட் என்பவரை ஜெனிஃபர் லோபஸ் திருமணம் செய்தார். அத்திருமணமும் கைக்கொடுக்கவில்லை. திருமணமான இரண்டு வருடங்களிலேயே தம்பதியினர் பிரிந்தனர்.

அதனை தொடர்ந்து ஜெனிஃபர் லோபஸ், பாடகரும் நடிகருமான மார்க் அந்தோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான பத்து வருடங்கள் கழித்து கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் தற்போது பென் அஃப்லக்குடன் மீண்டும் காதல் கொண்டு கடந்த சனிக்கிழமை இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் பென் அஃப்லக் இதற்கு முன் ஜெனிஃபர் கார்னர் என்ற நடிகையை திருமணம் செய்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜெனிஃபர் கார்னருடன் விவாகரத்தானது. அதன் பின் தற்போது ஜெனிஃபர் லோபஸை திருமணம் செய்து கொண்டார். ஹாலிவுட் ரசிகர்கள் எதிபார்த்துக் கொண்டிருந்த இவர்களின் திருமணத்திற்கு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top