TELEVISION
“இதனால் தான் நான் வெளில போறேன்.. Bye…” ராஜா ராணி 2 சீரீயலில் இருந்து விலகிய வில்லி நடிகை…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி” சீசன் 2 தொடரில் வில்லியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்த நடிகை தற்போது அந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளாராம். இது குறித்து அவரே கூறியுள்ளதை பார்ப்போம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி” சீசன் 2 தொடரில் நெகட்டிவ் ரோலில் வந்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் விஜே அர்ச்சனா. இவரின் நடிப்பு பலரையும் ரசிக்க வைத்தது.
விஜே அர்ச்சனாவும் “பாரதி கண்ணம்மா” தொடரில் நடித்து வரும் அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாகவும் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் விஜே அர்ச்சனா “ராஜா ராணி” சீசன் 2 சீரீயலில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் வந்தது.
“இது உண்மையாக இருக்காது. இது ஒரு வதந்தி” என ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜே அர்ச்சனா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “வணக்கம். அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ப்ரைஸ்கள் நிறைந்துகிடக்கும். எனது அடுத்த கட்ட வாழ்க்கை பயணத்தை தொடங்க தகுந்த நேரம் வந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.
ராஜா ராணி 2 தொடரில் என்னுடன் நடித்தவர்களை நான் மிஸ் செய்வேன். மொத்த குழுவையும் நான் மிஸ் செய்வேன். எனக்கு சப்போர்ட் செய்த குழுவினருக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் வரை உங்கள் அன்பை கொட்டி கொடுத்த அனைவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது இதே அன்புடன் உங்களை நான் வேறு ஒரு புதிய தொடக்கத்தில் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது அர்ச்சனா” என கூறியுள்ளார்.
இதில் இருந்து அர்ச்சனா சீரீயலில் இருந்து விலகியது உறுதியாகி உள்ளது. இதற்கு முன் ஆல்யா மானசா தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரீயலில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனாவுக்கு பதிலாக இனி “ஈரமான ரோஜாவே” தொடரின் அர்ச்சனா குமார் தொடர்வார் என கூறப்படுகிறது.
View this post on Instagram
