TELEVISION
தர்ஷனுடன் கடலை போட்ட சுனிதா, கடுப்பான முத்துக்குமார்..
தர்ஷனுடன் சுனிதா லவ்வாங்கி செய்து கொண்டிருந்தபோது சுனிதாவின் முத்துக்குமார் கடுப்பாகி முறைத்த கலகலப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 3-ல் சென்ற வாரம் புதுப்பேட்டை “கொக்கி குமார்” கெட்டப்பில் சுனிதா தோன்றினார். அவர் தமிழ் பேசுவதே நகைச்சுவையாக இருக்கும். இதில் கொக்கி குமார் கெட்டப்பில் வந்து “யாராவது இருக்கீங்களா, பயமா இருக்கு” என்று கூறியதும் அரங்கமே சிரித்தது.
முத்துக்குமாருக்கு கோமாளியாக வந்த சுனிதா பயங்கரமாக சொதப்பி தள்ளினார். முத்துக்குமார் சுனிதாவை முறைத்துக் கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து சுனிதாவை குக்கும்பர் எடுத்து வர சொல்லி அனுப்பினார். Store room-க்கு போன சுனிதா கேமராவை பார்த்து “இப்பதான் பா எனக்கு ரெஸ்ட்டே கிடைச்சிருக்கு, இந்த கொக்கி குமாரை கொக்கிலயே தொங்க விட்டுடாங்கப்பா” என புலம்பினார்.
அப்போது Store room-க்கு தர்ஷன் வந்திருந்தார். சுனிதாக்கு தர்ஷன் கிரஷ் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. சுனிதா தர்ஷனை பார்த்தவுடன் உற்சாகமாகி “முத்துக்குமார் சார் தாடி வச்சிட்டு என்னை உர்ர்ர் ன்னு பார்த்திட்டே இருக்காரு” என கூறிக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் முத்துக்குமார் Store room-க்குள் நுழைந்து சுனிதாவையும் தர்ஷனையும் முறைத்து பார்த்தார். சுனிதா என்ன செய்வதென்று தெரியாமல் தர்ஷனின் பின் ஒளிந்து கொண்டார். இது க்யூட்டாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. இந்நிலையில் இக்காட்சி தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.
அதே போல் பரத்தும், அதிர்ச்சி அருண்ணும் குக்கர் விசிலுக்கு பதிலாக அவர்கள் தங்கள் வாயாலயே விசிலடித்தது வயிறு வலிக்க சிரிப்பை உண்டாக்கியது. மேலும் செஃப் தாமு “குக்கர் மேல் வெயிட் போடுங்கடா” என்று சொன்னபோது “அப்படி சொல்லாதீங்க, பரத் குக்கர் மேல ஏறி உக்காந்திருவான்” என கூறியது குபீரென சிரிப்பை கிளப்பியது.