HOLLYWOOD
வெள்ளிக்கிழமை சும்மா அனல் பறக்க போகுது…
வருகிற வெள்ளிக்கிழமை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சீரீஸின் 4 ஆம் சீசனின் இரண்டாம பாகம் வெளிவரவுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட வெப் சீரீஸ் “ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்”. 1980-களில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரீஸ், ஒரு சைன்ஸ் ஃபிக்சன் வகையராவை சேர்ந்ததாகும்.
அதாவது ஒரு ஆய்வுக்கூடத்தில் செய்த ஆய்வின் விளைவால் பேரலல் யுனிவர்ஸ் என்று சொல்லக்கூடிய இன்னொரு உலகில் இருந்து ஒரு பயங்கரமான மிருகம் உலகத்துக்குள் நுழைந்து ஆட்டம் காட்டுவதே இந்த வெப் சீரீஸின் மையக் கரு.
மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்ட திரைக்கதையை கொண்ட முதல் சீசனின் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு இரண்டாம் சீசன் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
2019 ஆம் ஆண்டு மூன்றாம் சீசன் வெளிவந்தது. அதனை தொடர்ந்து மே மாதம் 27 ஆம் தேதி நான்காம் சீசனின் முதல் பாகம் வெளிவரவுள்ளது என்று அறிவிப்பு வெளியானது. ஆதலால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
அதன் படி “ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்கஸ்” வெப் சீரீஸின் நான்காம் சீசனின் முதல் பாகம் வெளிவந்தது . வெப் சீரீஸை பார்த்த ரசிகர்கள் தாறுமாறு என்று பாராட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து நான்காம் சீசனின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேத்திக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது நான்காம் சீசனின் இரண்டாம் பாகம் வருகிற வெள்ளிக்கிழமை வெளிவர உள்ளது. ஆதலால் பெரும் குஷியாக இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கின்றனர்.