Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நட்சத்திர நடிகை திருமணம் இடம் மாற்றம்”.. அம்மா போட்ட தடுப்பணை..

GOSSIPS

“நட்சத்திர நடிகை திருமணம் இடம் மாற்றம்”.. அம்மா போட்ட தடுப்பணை..

“நட்சத்திர” நடிகையும் “ரவுடி” இயக்குனரும் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ள நிலையில் திருமணம் இடம் மாற்றம் குறித்த ஒரு சுவாரசியமான கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.

“நட்சத்திர” நடிகையும் “ரவுடி” இயக்குனரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து உலகம் முழுவதும் சுற்றி இணையத்தில் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். இப்படியே காதல் புறாவாக சுற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருட இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர். அதன் பின் சமீபத்தில் அந்த பிரபலமான மலைக் கோவிலில் வைத்து திருமணம் செய்ய உள்ளதாக தகவலும் வந்தது.

ஆனால் சில நாட்களில் “அந்த மலைக் கோவிலில் திருமணம் இல்லை, உள்ளூரில் தான் திருமணம்” என இடத்தை மாற்றிய செய்தி வந்தது. அதாவது இந்த இடமாற்றத்திற்கு காரணம் “நட்சத்திர” நடிகையின் அம்மா தானாம். அதாவது ஹிந்து கோவிலில் திருமணம் செய்வது அவரது அம்மாவுக்கு ஏதோ மனதில் தெருடல் ஏற்பட்டதாம். அதனால் தான் இடம் மாற்றப்பட்டதாம்.

ஆனால் இன்னொரு பக்கம் மலைக் கோவில் அதிகாரிகள் சில காரணங்களால் இந்த திருமணத்தை கோவிலில் நடத்த சம்மதிக்கவில்லை எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறதாம். இவர்களின் திருமணம் இடம் மாறியதற்கான காரணத்தை கேட்ட போது “உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக உள்ளூரிலேயே திருமணத்தை நடத்த முடிவெடுத்தோம்” என கூறினார்களாம்.

ஆனால் அது காரணம் இல்லை எனவும், கோவிலின் மறுப்பும் அம்மாவின் மறுப்பும் தான் காரணம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GOSSIPS

To Top