GOSSIPS
“நட்சத்திர” நடிகரின் தோளை பிடித்து தொங்கும் வேதாளங்கள்; என்ன செய்யப் போறாரோ தெரிலயே?
“நட்சத்திர” நடிகரின் தோளை இரு வேதாளங்கள் பிடித்து தொங்குவதால் தற்போது அவர் பெரும் சிக்கலில் இருக்கிறாராம்.
“நட்சத்திர” நடிகர் நடித்து சமீபத்தில் வெளிவந்த அந்த “பிக் பிரதர்” திரைப்படத்திற்கு சரியாக ரெஸ்பான்ஸ் கிடைக்காத நிலையில் “மிருக” இயக்குனருடன் ஜாயிண்ட் அடித்தார். ஆனால் “மிருக” இயக்குனர் ஏற்கனவே எடுத்த “மிருகம்” படம் சரியாக எடுபடவில்லை.
நெட்டிசன்கள் அந்த “மிருக” இயக்குனரை போட்டு வைத்து செய்துவிட்டார்கள். இதனால் “நட்சத்திர” நடிகருக்கு பகீர் என ஆனதாம். தனது அடுத்த படம் பற்றிய பயம் கூடியதாம். ஆதலால் தான் தனது அடுத்த படத்திற்கான திரைக்கதையை பலப்படுத்த ஒரு “ரிடையர்ட்” இயக்குனரை நியமித்தாராம். எனினும் இந்த தடவையாவது நம் படம் வெற்றிப் படமாக ஆக வேண்டும் என எச்சரிக்கை உணர்வோடே இயங்கி வருகிறாராம் “நட்சத்திர” நடிகர்.
இன்னொரு பக்கம் “நட்சத்திர” நடிகரின் நண்பரும் போட்டியாளருமான அந்த “குழப்ப” நடிகர் நடித்து வெளிவந்த சமீபத்திய திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியுள்ளதால் “நட்சத்திர” நடிகருக்கு தூக்கமே வரமாட்டிக்கிதாம். ஆதலால் தனது அடுத்த படத்தின் வசூல் அந்த “குழப்ப” நடிகர் படத்தின் வசூலை ஓவர் டேக் செய்ய வேண்டும் எனவும் முடிவில் இருக்கிறாராம்.
ஏற்கனவே “மிருக” பட இயக்குனரை நம்பி இறங்கியுள்ளதால் துக்கத்தில் இருக்கும் “நட்சத்திர” நடிகருக்கு “குழப்ப” நடிகர் மேலும் துக்கத்தை கிளப்பியுள்ளாராம். இந்த இரு வேதாளங்களையும் தோளில் தாங்கிக் கொண்டு பாவமாய் அழைகிறாராம் “நட்சத்திர” நடிகர் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.