GOSSIPS
“வில் அம்பு” நடிகருக்கு “நட்சத்திர” நடிகர் மகள் போட்ட கண்டிஷன்.. பாவம் அவர் நிலைமை..
‘வில் அம்பு” நடிகருக்கு “நட்சத்திர” நடிகரின் மகள் கவலைக்கிடமான ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம்.
“வில் அம்பு” நடிகருக்கும் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கும் இடையே இருந்த ரிலேஷன்சிப் சமீபத்தில் உடைந்தது. அதன் பின் இருவரும் அவரவர்களின் வேலையை பார்க்க போய் விட்டனர்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் மேல் இருவரில் யார் பாசமாக இருக்கிறார்கள் என்பதில் ஈகோ பிராப்ளம் வந்துள்ளதாம். அதாவது”வில் அம்பு” நடிகர் தான் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பல நாட்கள் டிரிப் போவது, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவது என சுற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆதலால் சுற்றத்தார்கள் “அப்பா தான் பிள்ளைகள் மேல் பாசமாக இருக்கிறார், அம்மா பாசமாக இருப்பதில்லை போல” என பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம். இதனால் “நட்சத்திர” நடிகரின் மகளுக்கு பெரும் காண்டாகி விட்டதாம்.
ஆதலால் இனிமேல் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பிள்ளைகளை “வில் அம்பு” நடிகருடன் எங்கும் அனுப்பக் கூடாது என முடிவெடுத்திருந்தாராம். எனினும் “வில் அம்பு” நடிகர் அழுகாத குறையாக கெஞ்சியுள்ளார். ஒரு தருணத்தில் இரக்கப்பட்ட “நட்சத்திர” நடிகரின் மகள் “சரி பிள்ளைகளை கூப்பிட்டு போங்கள், ஆனால்” என ஒரு “க்” வைத்துள்ளாராம்.
என்னவென்றால் “இனிமே என் பிள்ளைங்களோட செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவுல் போஸ்ட் பண்ணக்கூடாது” என்று கண்டிஷன் போட்டுள்ளாராம். “வில் அம்பு” நடிகரும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒத்துக்கொண்டுள்ளாராம்.
“என்ன இருந்தாலும் இவருக்கு இப்படி ஒரு கண்டிஷனை போட்டிருக்க கூடாது. அப்பாவுக்கும் பிள்ளைகளின் மேல் பாசம் இருக்கும் அல்லவா?” என கோலிவுட் வட்டாரங்கள் “உச்” கொட்டி வருகின்றனர். மேலும் “வில் அம்பு” நடிகரின் உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்றி வருகிறார்கள் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.