TELEVISION
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஸ்ரீநிதி.. என்ன ஆகப்போறாரோ??
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பெயர் போன ஸ்ரீநிதி கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகப் பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக திகழ்ந்து வருவது “பிக் பாஸ்” தான். புதுமையாக எதாவது வருமா? என வெயிட் செய்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சியாக வந்த நிகழ்ச்சி தான் “பிக் பாஸ்”.
“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியபோதே இந்நிகழ்ச்சிக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்தது. டி ஆர் பி பட்டையை கிளப்பியது. ரசிகர்கள் “பிக் பாஸ்” ஒளிபரப்பாகும் போது வேறு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பாராமல் “பிக் பாஸ்” நிகழ்ச்சியையே பார்த்தனர். இதனால் மற்ற தொலைக்காட்சி நிறுவனர்கள் கடுப்பானதும் உண்டு.
எப்படியாவது “பிக் பாஸ்” நிகழ்ச்சியை ஓரங்கட்டிவிடலாம் என பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் எதுவும் கைக்கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த வரவேற்பை தொடர்ந்து “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் 5 ஆவது சீசனே வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது 6 ஆவது சீசன் தயாராகி வருகிறது.
“பிக் பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். ஆதலால் “பிக் பாஸ்” 6 ஆவது சீசனையும் சிம்பு தான் தொகுத்து வழங்குவாரோ? என கேள்வி எழுந்தது. எனினும் “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியை வழக்கம் போல் கமல் தான் தொகுத்து வழங்குவார் என செய்திகள் வருகின்றன.
இதற்கு முன் வந்த சீசன்களை விட சீசன் 6-ல் சர்ச்சையான நபர்கள் பலரையும் தேடி தேடி விஜய் டிவி நிர்வாக தேர்ந்தெடுப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பிய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் நுழைய உள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
“பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.