TELEVISION
இந்த டிரெஸ்ஸால சிவாங்கி பட்ட பாடு இருக்கே! அய்யோ!!
கதாநாயகி போல் ஆடை அணிந்து கலக்கலாக செல்ல நினைத்த சிவாங்கிக்கு வந்த சோகத்தை பாருங்களேன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டவர் சிவாங்கி. இவர் தற்போது “குக் வித் கோமாளி” மூன்றாவது சீசனில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் “சூப்பர் சிங்கர்” 7 ஆவது சீசனில் கன்டெஸ்டண்டாக கலந்து கொண்டு டாப் 6க்கு முன்னேறினார். இவர் பேசும்போது இவரது குரலை பலரும் கிண்டல் செய்து வந்தனர். இது குறித்து ஒரு மேடையில் சிவாங்கி “எனது குரலை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க” என கண்ணீர் வடித்தார். அந்த நெகட்டிவ்களை எல்லாம் அதே குரலாலேயே ஓரம் கட்டியவர் சிவாங்கி.
சிவாங்கி மிகவும் அருமையாக பாடுவார். இவர் தனி ஆல்பம்களில் இருந்து திரைப்பட பாடல்கள் வரை பல பாடல்களை பாடியுள்ளார். சிறு வயதில் “பசங்க” திரைப்படத்தில் இடம்பெற்ற “அன்பாலே” என்ற பாடலை பாட்டியிருப்பார், அதன் பின் “முருங்கக்காய் சிப்ஸ்”, “என்ன சொல்ப் போகிறாய்”, “வேலன்”, “கூகுள் குட்டப்பா” ஆகிய திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார்.
தனி ஆல்பம்களை பொருத்தவரை “சொல்ல மாட்டேன் போ”, “அஸ்கு மாரோ”, “அடிபொளி”, “நோ நோ”, “சாயா”, “வெண்ணிலாவும் பொன்னி நதியும்”, “மௌனமாய்”, “முட்டு முட்டு” ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார். இதில் குறிப்பாக “அஸ்கு மாரோ” பாடல் பிரபலமாக பலராலும் ரசிக்கப்பட்டது. இதனை சிவாங்கி தெலுங்கிலும் பாடியிருப்பார்.
சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் ஷிவாங்கி நடித்திருந்தார். மேலும் “காசேதான் கடவுளடா”, வடிவேல் நடிப்பில் வெளிவர இருக்கும் “நாய் சேகர்” போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் சிவாங்கி. அவ்விழாவில் கதாநாயகியை போல் உடை அணிந்து வந்திருந்தார். அந்த உடையினால் அவர் படி ஏறமுடியாமல் அவஸ்தைப் பட்டார். அவரது நீளமான உடையை மூன்று பேர் தாங்கிக் கொண்டு சென்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கதில் வெளியிட்டு “Dress atrocities” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் சிவாங்கி.
https://t.co/hWfHMynrqB
Dress attrocities 😜— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 8, 2022