TELEVISION
நக்கல் அடித்த ரசிகரை கதறவிட்ட சிவாங்கி.. வேற லெவல் பதிலடி
நக்கல் அடித்த இணையவாசி ஒருவரை தனது எளிமையான டிவிட்டால் பதிலடி கொடுத்துள்ளார் சிவாங்கி.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கி பலரின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்து வருபவர். அவரின் க்யூட்டான பேச்சும் நிகழ்ச்சியில் அவர் செய்யும் சேட்டைகளும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கும்.
அவர் சிறந்த பாடகர் என்பது நம்மில் அனைவரும் அறிந்ததே. “சூப்பர் சிங்கர்” சீசன் 7 ஆவது சீசனில் கலந்து கொண்டு டாப் 7 வரை முன்னேறினார். இவரின் தந்தை தாய் இருவருமே பாடகர்கள். இவரது தாய் பின்னி கிருஷ்ணகுமார் “சந்திரமுகி” திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான “ரா ரா” பாடலை பாடியவர்.
இந்நிலையில் சென்ற வாரமும் இந்த வாரமும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சில காரணங்களால் சிவாங்கி பங்கு கொள்ளவில்லை. இதனை வைத்து ஒருவர் இணையத்தில் நக்கலாகவும் வெறுப்பை கக்கும் விதமாகவும் “இந்த வாரமும் கிரிஞ்ச் சிவாங்கி இல்லை” என டிவிட் செய்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவாங்கி “இல்லாத என்னை பத்தி பேசி வெறுப்பை கக்குறதுக்கு பதிலா இருக்குற செம்ம கோமாளிகள் பத்தி பேசுனா இன்னும் சூப்பரா இருக்கும்ல ப்ரோ, யோசிச்சி பாருங்க!” என பதில் அளித்துள்ளார்.
Illadha enna pathi pesi hate panradhuku irukra semma comalis pathi pesuna innum super a irukum la bro? Think about it!🌝 https://t.co/LoTMklCOAV
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) June 11, 2022
இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிவாங்கியின் ரசிகர்கள் கமெண்ட்டில் “சூப்பர் பதிலடி” “லவ் யூ செல்லம், சூப்பர்” என்பது போல் சிவாங்கியை பாராட்டி வருகின்றனர். சிவாங்கி எந்த ஒரு கடினமான தருணத்தையும் Cool ஆக எடுத்துக் கொள்பவர். தற்போது அவர் மேல் வெறுப்பை கக்கிய இணையவாசி ஒருவருக்கு Cool ஆக பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
